For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் பொருளாதாரத்தை தூக்கி சுமக்கும் "கழுதைகள்"! சீனாவுக்கும் செம லாபம்! ஒரே கல்லில் 2 மாங்காய்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிலைமையைக் காப்பதில் கழுதைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...

கொரோனா பெருந்தொற்று உலகின் அனைத்து நாடுகளையும் மோசமாகப் பாதித்தது. நமது அண்டை நாடான இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பிற்கு கொரோனா வைரஸ் தான் முக்கிய காரணம்.

இலங்கை நாட்டில் மட்டுமல்ல, பாகிஸ்தான் நாட்டிலும் பொருளாதார நிலை மோசமாகவே உள்ளது. நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

அப்படி அந்த நாட்டின் பொருளதாராத்தை காப்பதில் கழுதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. அது தான் உண்மை. 2021-2022 நிதியாண்டிற்கான பாக். நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கால்நடைகளை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது, குறிப்பாகக் கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது விவசாயத்திற்கு உதவுவது மட்டுமின்றி அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுகிறது.

 கழுதைகள்

கழுதைகள்

கடந்த 2019-20ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 55 லட்சம் கழுதைகள் இருந்த நிலையில், அது இப்போது 57 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. பாக். நாட்டின் நிதி அமைசச்சம் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக வளர்ந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. அங்கு சில மாதங்களை நிலவிய அரசியல் குழப்பத்தையும் தாண்டி ஜிபிடி 5.97ஆக வளர்ந்து உள்ளது.

 10 லட்சம்

10 லட்சம்

அங்குக் கழுதைகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் அதிகரிக்கிறது. கடனில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான், கால்நடை ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கிறது. இதற்காகக் கழுதைகள் மட்டுமின்றி செம்மறி, எருமை, வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்காகக் கால்நடைகளை ஏற்றுமதி செய்வதில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

பாகிஸ்தானின் விவசாயத் துறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. விவசாயத் துறை ஒட்டுமொத்தமாக 4.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாகப் பயிர்களின் வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும் கால்நடைகளின் வளர்ச்சி 3.3 சதவிகிதமாகவும் உள்ளது. பாகிஸ்தானில் 80 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன.

 நடவடிக்கை

நடவடிக்கை

கால்நடை வளர்ப்பு மூலம் கிடக்கும் வருவாய் ரூ. 5,269 பில்லியனில் இருந்து (2020-21) ரூ. 5,441 பில்லியனாக (2021-22) அதிகரித்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 3.26% அதிகரித்து உள்ளது. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அந்நாட்டு அரசு கொள்கை ரீதியிலும் பல முடிவுகள் எடுத்து வருகிறது. கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

 சீனா

சீனா

கழுதை வளர்ப்பு அதிகரிக்கச் சீனாவும் ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் சீன மருத்துவத்தில் கழுதை தோல் மற்றும் ஜெலட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. பாகிஸ்தானில் கழுதை வளர்ப்பில் சீன நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாநிலங்களில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே கூட தனி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனா

சீனா


கழுதை வளர்ப்பு அதிகரிக்கச் சீனாவும் ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் சீன மருத்துவத்தில் கழுதை தோல் மற்றும் ஜெலட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. பாகிஸ்தானில் கழுதை வளர்ப்பில் சீன நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாநிலங்களில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே கூட தனி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 சீன மருத்துவம்

சீன மருத்துவம்

உலகிலேயே அதிக அளவில் கழுதைகளை வளர்ப்பது சீனா தான். எஜியாவோ எனப்படும் சீன மருந்தை உற்பத்தி செய்யக் கழுதைத் தோல் முக்கியப் பொருளாகப் பயன்படுத்துகிறது. இது சிறந்த ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ரத்த சோகை மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆன உறவு இப்போது கழுதை முதுகிலும் சவாரி செய்கிறது.

English summary
Donkey is helping to keep on Pakistan's economy: (பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காக்க உதவும் கழுதைகள்) Pakistan has been prioritising agriculture and livestock to boost its economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X