For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க ஓரினசேர்க்கை கிளப்பில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

How reliable is the ISIS' claim about the Orlando terror attack

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு அங்குமிங்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமானவர்கள் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் படையினர் விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் போராளி குழுக்களின் கைவரிசை சந்தேகிக்கப்படுவதாகவும் ஆர்லண்டோ போலீஸ் வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.

இதனிடையே இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான எந்த உடனடி ஆதாரமும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான உமர் மேதீன் என்பவர்தான் கொலையாளி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓரின சேர்க்கைக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பரப்பி வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டவராக இவர் இருக்க கூடும் என தெரிகிறது.

English summary
The US authorities have not yet blamed the ISIS for the Orlando incident in which 50 persons were killed. The ISIS was however quick to claim responsibility and even posted the same on their news agency Amaq.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X