For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறட்சி, வெள்ளம் என உலகை மிரட்டும் 'எல் நினோ': எச்சரிக்கும் நிபுணர்கள்

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: எல் நினோவால் உலகின் பல்வேறு பகுதிகளில் வறட்சி, வெள்ளம் என்று இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலில் தண்ணீரின் வெப்ப நிலை மாறுகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பருவ நிலையில் மாற்றம் ஏற்படும். இதை தான் எல் நினோ என்கிறார்கள். எல் நினோவால் பாலைவனங்களில் மழை பெய்யும், மழை நன்கு பெய்யும் இடங்களில் வறட்சி ஏற்படலாம் அல்லது வெள்ளம் ஏற்படலாம்.

Huge El Nino is Spreading Mayhem Worldwide

எல் நினோவின் தாக்கம் உலகம் முழுவதும் துவங்க ஆரம்பித்துள்ளது. எல் நினோவால் கடும் வறட்சி, வெள்ளம், பருவ நிலையில் முக்கிய மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் பயங்கரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 1997-98ல் தான் எல் நினோவின் தாக்கல் அதிகமாகி வெள்ளம், வறட்சி, தீ விபத்துகள் ஏற்பட்டு 30 ஆயிரம் பேர் பலியாகினர். அதற்கும் முன்பு 1918-19ல் இந்கியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு உலக அளவில் நோய்கள் பரவின.

எல் நினோ காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் தொற்று நோய்கள் அதிகம் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. எல் நினோவால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள், ஜப்பான், கொரியா, சீனாவில் குளிர்காலம் வெப்பமாக இருக்கும். தென்னமெரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் மழை பெய்யும். மேற்கு பசிபிக் மற்றும் பிரேசிலின் சில பகுதிகளில் வறட்சி நிலவும்.

எல் நினோவால் வியட்நாமில் காபி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் தென் பகுதியிலும் காபி விளைச்சல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமத்ரா, போர்னியோ, நியூ கினியாவில் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் அழிந்துள்ளன. இதனால் சிங்கப்பூரில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் வறட்சியால் தேயிலை விளைச்சல் 10 சதவீதம் குறையும். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து புளோரிடா வரை அதிக மழை பெய்யும். இந்த மழையால் கலிபோர்னியாவில் கடந்த 4 ஆண்டு காலமாக நிலவி வரும் வறட்சியை போக்க முடியாது.

புளோரிடாவில் அதிக மழையால் ஆரஞ்சு சாகுபடி கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோவால் ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்படும்.

எல் நினோவால் இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழையின் அளவு வழக்கத்தை விட மிகவும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Experts are warning that El Nino could affect the world in a severe manner this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X