For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை புரட்டிப்போட்ட மாத்யூ புயல்.. பலி எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

புளோரிடா: அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் கரீபியன் பகுதியில் ஏற்பட்ட மாத்யூ புயல் அங்குள்ள மக்களை சின்ன பின்னமாக புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் புயலில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது.

இந்த புயலின் காரணமாக கடந்த மூன்று நாட்களாகப் பலத்த மழை, காற்றுடன் சூறாவளி ஏற்பட்டுள்ளது. புயலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, ஏறக்குறைய 12 லட்சத்திற்கு அதிகமான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Hurricane Matthew: Heavy rains and winds in Florida

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மாத்யூ புயல் நேரடித் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது.

அவசரக் காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேமித்து, மாத்யூ புயலை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வரும் வேளையில், இந்தப் புயலின் தாக்கத்தால் அதிக அளவில் உயிர்ச்சேதம் உண்டாக வாய்ப்பு இருப்பதாக, தேசிய காலநிலை நிறுவனம் அறிவித்துள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த புயலால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல பகுதிகளில் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சில தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளன.குறிப்பாக சில தீவுகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. இதில் ஹைதி பலத்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிகிறது.

English summary
Hurricane Matthew: Florida braces for 'immense suffering', as Haiti death toll exceeds 300.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X