For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக், டுவிட்டர் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்

Google Oneindia Tamil News

பாக்தாத்: பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு. ஆரம்பகாலத்தில் 10 ஆயிரம் உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 30 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தங்களது இயக்கத்தில் மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, அதற்கான முக்கியக் களமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளது.

சமூக வலைதளங்கள்...

சமூக வலைதளங்கள்...

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக தங்கள் இயக்கத்தில் சேர விரும்புவர்களைத் தொடர்பு கொள்கிறதாம் இந்த தீவிரவாத அமைப்பு.

புதிய உறுப்பினர்கள்...

புதிய உறுப்பினர்கள்...

இந்த சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள உரையாடல் நிகழ்ச்சி மூலம் புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறது.

வாழ்க்கைத் துணை...

வாழ்க்கைத் துணை...

இயக்கத்திற்கான புதிய உறுப்பினர்களுக்காக மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும் இது போன்ற சமூக வலைதளப் பக்கங்களைத் தான் தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.

குடும்ப விவரம்...

குடும்ப விவரம்...

தாங்கள் திருமணம் செய்ய விரும்பும் பெண்களின் வயது, பேசும் மொழி மற்றும் அவர்களின் குடும்ப விவரங்களை சமூக வலைதளப் பக்கங்களின் உதவியோடு பெற்றுக் கொள்கிறார்களாம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

English summary
It has come to know that the I.S.I.S. terrorists are using social networking websites like Facebook, twitter for joining new members for thier organization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X