2050க்குள் சூரியனோட சூடு குறைஞ்சிடுமாம்.. மினி ஐஸ் ஏஜ் உருவாகுமாம்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2050க்குள் சூரியனோட சூடு குறைஞ்சிடுமாம்...வீடியோ

  கலிஃபோர்னியா: அடுத்த 30 ஆண்டுகளில் சூரியன் மங்கும் என்றும் மினி ஐஸ் ஏஜ் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  கடந்த சில ஆண்டுகளாக சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் துருவப்பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது.

  அதேபோல் புவி வெப்பமயமாதல், கிளைமேட் சேஞ்ச் போன்றவற்றால் பூமி அழிவை நோக்கி செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிகம் வெப்பம் பதிவான ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  டிம்மாக, குளிர்ச்சியாக சூரியன்

  டிம்மாக, குளிர்ச்சியாக சூரியன்

  இந்நிலையில் அடுத்த 30 ஆண்டுகளில் வெப்பம் கணிசமாக குறைந்துவிடும் என கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது 2050ஆம் ஆண்டுக்குள் சூரியனின் வெப்பநிலை குறைந்து சூரியன் டிம்மாக காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  இதய துடிப்பு போல

  இதய துடிப்பு போல

  சூரியனின் 11 ஆண்டுகள் சுழற்சி முறையை கண்காணித்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 11 ஆண்டு கால சுழற்சியில் சூரியன் நகர்கிறது என்று பொதுவாக அறியப்படுகிறது என்றும் அது இதய துடிப்பு போல, அதிகபட்ச சூரியக்கதிர் மற்றும் குறைந்தபட்ச சூரியக்கதிர் என கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த காலக்கட்டம் சூரியனின் அமைதியான மற்றும் ஆக்ரோஷமான பீரியட் என்றும் கூறப்படுகிறது.

  அசாதாரண குளிர்ச்சி

  அசாதாரண குளிர்ச்சி

  இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் சூரியன் அசாதாரணமாக குளிர்ச்சியாகும் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 17ஆம் நூற்றாண்டில் இதுபோல் சூரியன் குளிர்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  உறைந்த தேம்ஸ் நதி

  உறைந்த தேம்ஸ் நதி

  இதுபோன்று மவுன்டர் மினிமம் என்ற நிகழ்வின் போது சூரியனின் வெப்பநிலை குறைந்ததால் தேம்ஸ் நதி உறைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற காலகட்டத்தில் தான் பால்டிக் கடல் உறைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  கடல் மேல் நின்று போர்

  கடல் மேல் நின்று போர்

  அப்போது பால்டிக் கடற்பரப்பின் மீது சுவீடன் படைகள் அணிவகுத்துச் சென்று 1658ம் ஆண்டு டென்மார்க்கின் மீது படையெடுத்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  மினி ஐஸ் ஏஜ்கள்

  மினி ஐஸ் ஏஜ்கள்

  இதுபோன்ற சூழ்நிலையில்தான் மினி ஐஸ் ஏஜ்கள் உருவானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சோலார் மினிமத்தின் போது சூரியன் வழக்கத்தைவிட ரொம்பவே டிம்மாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  7% கூடுதல் குளிர்ச்சி

  7% கூடுதல் குளிர்ச்சி

  அடுத்து வருவது கிராண்ட் மினிமம் என்றும் அப்போது கடந்த 11 ஆண்டுகளில் தோன்றிய குளிர்ச்சியான சூரியனை போன்று 7 சதவீத கூடுதல் குளிர்ச்சியுடன் சூரியன் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  சீரானதாக இருக்காது

  சீரானதாக இருக்காது

  சூரியனின் வெப்பநிலை குறையும் போது அதன் முதல் விளைவு ஓசோன் லேயர் மீது தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த குளிர்ச்சி சீரானதாக இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In the next 30 years, our sun could dim, and coolest that could create a 'mini ice age‘ said California university scientist. experienced in Europe in the mid-17th century. This system Called the 'Maunder Minimum,' temperatures were low enough to cause London's River Thames to freeze over. And then the Baltic Sea was frozen in that a Swedish army was able to invade Denmark in 1658 on foot across the ice.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற