இந்தியாவிடம் மண்டியிட்ட வங்கதேசம்.. ஷேக் ஹசீனா போட்ட போடால் கதறும் முகமது யூனுஸ்.. என்ன நடந்தது?
டாக்கா: நம் நாட்டுடன் மோதி வரும் வங்கதேசம் இப்போது டோனை மாற்றி பணிந்துள்ளது. ஷேக் ஹசீனா போட்ட போடால் பதறியடித்தபடி வங்கதேசம் மத்திய அரசிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நெருக்கமான உறவில் இருந்தார். இதனால் இருநாடுகள் இடையே நல்லுறவு இருந்தது. ஆனால் முகமது யூனுஸ் நம் நாட்டை சீண்டி வருவதால் இருநாடுகள் இடையேயான உறவு என்பது விரிசலடைந்துள்ளது.
இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை காரணம் காட்டி அவரை நாடு கடத்த நம் நாட்டுக்கு வங்கதேசம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் நம் நாடு இன்னும் செவிசாய்க்கவில்லை. இது வங்கதேசத்துக்கு அவமானமாக உள்ளது. அதோடு ஷேக் ஹசீனாவை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் முகமது யூனுசுக்கு இது தலைவலியாகவே இருந்து வருகிறது.
இதனால் ஷேக் ஹசீனாவை எப்படியாவது வங்கதேசத்துக்கு நாடு கடத்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது வங்கதேசம் டோனை மாற்றி இந்தியாவிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இதற்கு ஷேக் ஹசீனா போட்ட போடு தான் காரணம்.
இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது தவ்ஹித் உசேன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நம் நாட்டிடம் கெஞ்சியுள்ளார். அந்த பேட்டியில் அவர், ‛‛ இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும். இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்தாவிட்டால் அவருக்கு சில கட்டுப்பாடுகளையாவது விதிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்தபடி ஷேக் ஹசீனா சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. இந்த குற்றச்சாட்டுகளால் வங்கதேசத்தின் நிலைமை மோசமாகிறது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டு கால மோசமான ஆட்சியால் ஷேக் ஹசீனா மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இப்பேது அவர் கூறும் குற்றச்சாட்டுகளால் அவர் மீது மக்கள் கொந்தளிக்கும் நிலை உள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவுக்கு கட்டுப்பாடுகளை இந்தியா விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது தவ்ஹித் உசேன் இப்படி சொல்லி இருப்பதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா தொடர்ந்து தற்போது இணையதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் முகமது யூனுஸ் அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
''முகமது யூனுஸ் தன்னை கொலை செய்ய முயன்றார். அவரது தலைமையிலான அரசின் செயல்பாட்டால் வங்கதேசம் பின்நோக்கி செல்கிறது. பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது. மக்கள் சிரமப்படுகின்றனர்.நான் விரைவில் வங்கதேசம் வருவேன்'' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஷேக் ஹசீனாவின் இந்த குற்றச்சாட்டுகள் என்பது முகமது யூனுஸ் மற்றும் அவரது இடைக்கால அரசில் உள்ளவர்களை கவலையடைய செய்துள்ளது. அதோடு ஷேக் ஹசீனாவின் இந்த வீடியோக்கள் என்பது தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று முகமது யூனுஸ் நினைக்கிறார். இதனால் தான் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தாவிட்டாலும் கூட அவர் பேச கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வங்கதேசம் மண்டியிட்டுள்ளது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications