For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியரான அபிஜித் பானர்ஜி, மனைவி எஸ்தர் மற்றும் மெக்கேல் கிராமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

Google Oneindia Tamil News

Recommended Video

    Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer win 2019 Nobel Economics Prize

    ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிராம் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

    India-origin Abhijit Banerjee and Two others won 2019 Nobel Prize in Economics

    அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி. அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான பொருளாதார ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்சல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

    அபிஜித் பானர்ஜி

    கொல்கத்தா பல்கலைக் கழகம் மற்றும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்தவர் அபிஜித் பானர்ஜி. அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் க்கழகத்தில் 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போதும மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார் அபிஜித் பானர்ஜி. 2011-ல் ஃபாரின் பாலிசி பத்திரிகையில் உலகின் 100 சிந்தனையாளர்களில் ஒருவராக இடம் பிடித்தார் அபிஜித்.

    ஏராளமான ஆய்வு கட்டுரைகளையும் 3 நூல்களையும் இதுவரை அபிஜித் பானர்ஜி வெளியிட்டுள்ளார். "The Name of the Disease" என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார்.

    English summary
    Indian-origin Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer have won the 2019 Nobel Prize in economics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X