For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் “இந்தியர் தினம்” விழா – இந்தியக் கலாச்சாரத்தை போற்றும் எகிப்து!

Google Oneindia Tamil News

கெய்ரோ: இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் வகையிலான "இந்தியன் டே" விழா எகிப்தில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு எகிப்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி தலைமை வகி்த்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைநகர் கெய்ரோவில் உள்ள மவுலானா ஆசாத் இந்திய கலாச்சார மையம் செய்திருந்தது.

விழாவில் எகிப்து நாட்டின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கலாச்சார மையம் மூலம் இந்தி, உருது, யோகா, நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழாவில் கலந்து கொண்ட இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறுகையில், "இந்தியாவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் எகிப்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்தியா எகிப்து நாட்டில் முதலீடு செய்யும் நாடுகளில் ஏழாவது நாடாக உள்ளது" என தெரிவித்தார்.

English summary
India and Egypt, which share close bilateral ties, should look ahead to forge cooperation in multiple areas including science and technology and economy, the Indian envoy in Cairo said yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X