ஷாக் வீடியோ..வெளிநாட்டு ஓட்டலில் திருடி மாட்டிக்கொண்டு இந்தியாவின் மானத்தை வாங்கிய இந்திய குடும்பம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஷாக் வீடியோ..வெளிநாட்டு ஓட்டலில் திருடி மாட்டிக்கொண்ட இந்திய குடும்பம்

    பாலி: இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பம் பாலியில் உள்ள ஓட்டலில் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இந்தோனேஷியாவில் உள்ள அற்புதமான தீவுகளில் ஒன்று பாலி. இங்கு வாழும் பெரும்பான்யைமான மக்கள் இந்துக்கள் ஆவார். இந்த தீவை சுற்றிப் பார்க்க இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளது.

    Indian Family Were caught after stealing From Bali Hotel, shocking video

    அவர்கள் பாலியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் அவர்களை வெளியேறும் முன்பு அவர்களின் உடைமைகளை ஓட்டல் ஊழியர்கள் சோதனையிட்டுள்ளனர் அதில் ஓட்டலின் பல பொருட்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

    அதற்கு அந்த குடும்பத்தினர், மன்னித்துவிடுங்கள் எடுத்த பொருளுக்காக கூடுதல் பணத்தை கொடுத்துவிடுகிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் உங்களிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால் இது மரியாதை குறைவான செயல் என்பது உங்களுக்கு தெரியவில்லையா என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சனிக்கிழமை வெளியாகி உள்ளது. இந்த விடியோவை பார்த்து வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் டுவிட்டரில் மிகவும் ஆதங்கப்ட்டுள்ளார். அவர் தனது பதிவில் " இந்திய பாஸ்பேர்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் நம் நாட்டின் தூதுவர்கள். ஆகவே ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் மானத்தை வாங்குபவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்தி நடிகை நடிகை மினி மத்தூரும் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் "இந்தியாவின் மானத்தை வாங்கும் இந்தியர்கள் இவர்கள். பாலி ஓட்டலில் இருந்து கை கழுவும் லிக்விட், அறை அலங்காரப் பொருட்கள், ஹேர் ட்ரையர் உள்ளிட்டப் பொருட்களை அவர்கள் திருடி உள்ளார்கள் குறிப்பாக வீடியோ முடிவில், அந்த குடும்பத்தின் ஆண் ஒருவர் ஓட்டல் ஊழியரிடம் கெஞ்சுவது மிகவும் அறுவறுப்பாக இருக்கிறது" என கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+