For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் பிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் சந்தித்தபோது தலைகீழாக பறந்த இந்திய தேசிய கொடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில், ஜப்பான் பிரதமருடனான மோடியின் சந்திப்பின்போது, இந்திய தேசிய கொடி தலைகீழாக பறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபியை இன்று காலை சந்தித்தார்.

இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடத்தில் இரு நாடுகளின் தேசிய கொடிகள் சிறு கம்பத்தில் பறக்கவிடப்படுவது வழக்கம்.

அதேபோல மோடி-சின்சோ சந்திப்பின்போதும் இரு நாட்டு கொடிகளும் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், ஊழியர்கள் அவசர கதியில், இந்திய தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டுள்ளனர்.

இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டபோது பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது, இந்திய தேசிய கொடி தலைகீழாக பறப்பதும் போட்டோவில் கிளிக் ஆகிவிட்டது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In an embarrassing moment for the ASEAN organisers in Kuala Lumpur, the Indian flag was hoisted upside down when Prime Minister Narendra Modi met Japanese PM Shinzo Abe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X