சீட்டு கட்டுகளை போல சரிந்த கட்டிடங்கள்! இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Subscribe to Oneindia Tamil

ஜாக்கர்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருப்பதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறிது நேரத்திற்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சீட்டு கட்டுகளை போல அப்படியே சரிந்திருக்கின்றன. இரு நாட்களுக்கு முன்னர்தான் கொலம்பியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

earthquake Indonesia Tsunami

கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு அருகே இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து.. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களக்கு போக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

நிலநடுக்கம் காரணமாக சில வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் சேதமடைந்திருக்கின்றன. இப்போது வரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் முடிந்த பின்னரே உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும். சில இடங்களில் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்தில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகியிருக்கின்றன.

இந்தோனேசியா ரிங் ஆஃப் பயர் எனப்படும் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+