For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவை ஆட்டிப்படைக்கும் டிசம்பர் மாதம்!

டிசம்பர் மாதம் என்றாலே இந்தோனேஷிய மக்கள் பீதிகொள்ளும் அளவுக்கு இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை போல இந்தோனேசியாவையும் மிரள வைக்கும் டிசம்பர் மாதம்- வீடியோ

    ஜாவா: டிசம்பர் மாதம் என்றாலே இந்தோனேஷிய மக்கள் பீதிகொள்ளும் அளவுக்கு இயற்கை சீற்றங்கள் டிசம்பரில் தொடர்ந்து வருகிறது.

    செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, பூமியை போன்று வேறு கிரகம் உள்ளதா, வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா வேற்று கிரகத்திற்கு எப்போது குடியேறலாம் என மனிதன் ஒவ்வொரு நாளும் தனது ஆராய்ச்சியை விரிவாக்கி கொண்டே செல்கிறான்.

    ஆனால் எல்லாம் எனக்குப் பிறகுதான் என அவ்வப்போது பெரிடர்கள் மூலம் நினைவூட்டி செல்கிறது இயற்கை. இயற்கை சீற்றங்களால் ஒவ்வொரு நாடும் பேரிழப்பை சந்தித்து வருகிறது.

    பீதியை கிளப்பும் டிசம்பர்

    பீதியை கிளப்பும் டிசம்பர்

    குறிப்பாக இந்தோனேஷியாவில் டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்களும் பேரிடர்களும் தொடர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் மாதம் என்றாலே அய்யோ வந்துவிட்டதா என அந்நாட்டு மக்கள் பீதிகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

    சுமத்ரா நிலநடுக்கம்

    சுமத்ரா நிலநடுக்கம்

    இந்தோனேஷிய தீவுகள் மற்றும் இந்தோனேஷிய கடற்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டாலும் டிசம்பர் மாதத்தில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவானது.

    பல்லாயிரக்கணக்கானோர் பலி

    பல்லாயிரக்கணக்கானோர் பலி

    இதனால், இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் என உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளை சுனாமி தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாயினர்.

    பெரும் சேதம்

    பெரும் சேதம்

    அதன்பிறகு இந்தோனேஷிய தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. ஆனால் டிசம்பர் மாதங்களில் உருவாகும் நிலநடுக்கங்கள் பெரும் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் கொடுக்கும் வகையில் சக்திவாய்ந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.

    100 பேரை பலிகொண்டது

    100 பேரை பலிகொண்டது

    கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்தோனேஷியாவில் 6.7 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    டிசம்பரில் அதிக தாக்கம்

    டிசம்பரில் அதிக தாக்கம்

    இந்தோனேஷியாவின் சுமர்தா, சுலோவேசி, ஜாவா, ஜகார்த்தா ஆகிய தீவுகள் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    மீண்டும் பீதியை ஏற்படுத்திய டிசம்பர்

    மீண்டும் பீதியை ஏற்படுத்திய டிசம்பர்

    இந்நிலையில் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிசம்பரால் அச்சம்

    டிசம்பரால் அச்சம்

    நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது. இந்தோனேஷிய தீவுகளை டிசம்பர் மாதத்தில் தாக்கி வரும் இயற்கை சீற்றங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    English summary
    Indonesia facing natural disaster on December months. People afraid of December month by the natural disasters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X