கனடா பள்ளியில் பன்றிக்கறி தடை … முஸ்லீம்களின் கோரிக்கையை மறுத்தாரா மேயர்? Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

மன்ட்ரியால்(கனடா): கனடாவின் மன்ட்ரியால் மாநகரப் பகுதியில் உள்ள டோர்வல் நகர பள்ளிகளில் பன்றிக்கறி உணவு வழங்குவதை நிறுத்த முடியாது என்று மேயர் தெரிவித்துள்தாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் சுழன்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் வாட்ஸ் அப் குழுக்களிலும் ஏனைய இந்தியர்களின் வாட்ஸ் அப் குழுக்களிலும் ஆங்கிலத்தில் சற்று நீளமான செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

Is Canadian Municipality denies Muslisms request to ban pork?

டோர்வல்(Dorval) நகரப் பள்ளிகளில் பன்றிக்கறி வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அங்கு வசிக்கும் முஸ்லீம் மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதை நிராகரித்து, 'கனடாவில் குடியேறியவர்கள் கனடியன் வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும், உங்கள் நாட்டு வாழ்க்கை முறை பிடிக்கவில்லை என்று தானே இங்கு வந்தீர்கள். அதே வாழ்க்கையை தொடர வேண்டுமென்றால் இங்கு வந்திருக்க வேண்டாமே, உங்கள் கோரிக்கையை ஏற்க மாட்டோம்,' என்று மேயர் கூறியதாக இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்களுக்கு எதிராக கனடா நகர மேயர் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது போல் தங்களது கருத்துக்களையும் முன்னோட்டம் / பின்னூட்டமாக சேர்த்து வாட்ஸ் அப் உலா தொடர்கிறது.

ஒரு கணம் இது உண்மையாக இருக்குமோ என்று கூகுளில் தேடிப்பார்த்தால், சில இணையத் தளங்களில் அப்படியே அந்த தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கனடாவில் ஒரு நகராட்சி மேயர் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருந்தால், நிச்சயமாக ஏதாவது ஒரு முன்னணி பத்திரிக்கை / இணையதளம்/ உள்ளூர் தொலைக்காட்சியில் வந்திருக்கும். கூகுள் தேடுதலில் வந்திருக்கும்.

Is Canadian Municipality denies Muslisms request to ban pork?

குறிப்பிட்ட நகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று பார்த்தால், இது ஒரு பொய்யான பரப்புரை என்று செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையை டோர்வல் நகராட்சி புறக்கணிக்கிறது. அத்தகைய கருத்துக்களை மேயர் எட்கரோ அல்லது நகராட்சி உறுப்பினர்களோ தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நகராட்சியின் ஆய்வுப்படி இந்த பொய்யான கட்டுரை அமெரிக்காவிலிருந்து வெளியானதாக நம்ப வேண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்படுள்ளது. இதே போல் பெல்ஜியம் மேயர் பற்றியும் 2013 ஆம் ஆண்டு ஒரு பொய்யான கட்டுரை வெளியாகி இருந்ததாம். நகராட்சியின் மறுப்பு அறிக்கையை பார்க்க

http://www.ville.dorval.qc.ca/en/article/the-city- of-dorval-denounces- false-news- circulating-on- the-internet \

பத்து வருடமாகியும் தீரவில்லையே...

நகராட்சியை நேரடியாக தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளலாம் என்று அழைத்து, 'மேயர் சொன்னதாக...' என்று ஆரம்பித்த உடனேயே, அலுவலக வரவேற்பாளர் மரியா, "இது பொய்யான தகவல். பத்து வருடங்களாக இந்த கட்டுரை வெவ்வேறு ஊர்களின் பெயரில் வந்த வண்ணம் இருக்கிறது. டோர்வல் நகராட்சியில் யாரும் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கவில்லை," என்றார்.

Is Canadian Municipality denies Muslisms request to ban pork?

நாம் இந்தியாவின் முன்னணி இணையதள ஊடகமான ஒன்இந்தியாவிலிருந்து தொடர்பு கொள்கிறோம் என்று சொன்ன போது, இந்தியாவிலும் இந்த தகவல் சுற்றுகிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

வாட்ஸ் அப்பில் வந்ததைப் பற்றி சொன்னதும், "எங்களிடம் விசாரித்து உங்கள் ஊடகத்தில் டோர்வல் நகராட்சி சார்பில் மறுப்பு தெரிவிப்பதற்கு நன்றி" என்றும் கூறினார். கெபக் மாநிலத்தில் உள்ள மன்ட்ரியால் மாநகரப்பகுதியில் உள்ள டோர்வல் நகரில் இருபதாயிரத்திற்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் சல்பிசியன் பாதிரியார்கள் அங்கு ஒரு முகாம் அமைத்தது முதல் மக்கள் வசிக்கத் தொடங்கினார்கள். 1892 ம் ஆண்டு கிராமமாக முறைப்படி பதிவு செய்யப்பட்டு பின்னர் நகராட்சியாக விரிவடைந்தது.

Is Canadian Municipality denies Muslisms request to ban pork?

நகராட்சியின் 125ம் ஆண்டை விமரிசையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வாட்ஸ் அப்பில் பரபரப்பாக என்ன வந்தாலும் அப்படியே ஃபார்வட் செய்வது சரிதானா ? மேயர் பெயர் கூட குறிப்பிடாமல் ஒரு தகவல் வந்தால் அதன் நம்பகத்தன்மை பற்றி கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை, உண்மை போல் சித்தரித்து மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதற்கு டோர்வல் நகரைப் பற்றிய இந்த பொய்க் கட்டுரையே சாட்சி.

-இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There is a hoax news about a city of Canada, Dorval in Montreal metropolitan, alleging Mayor issued a statement rejecting Muslim’s demand to ban pork in schools. The hoax news article claims Muslims in that city made a demand to ban pork in school and the Mayor not only refused but also advised them to adopt to Quebec life style and culture. When contacted, city receptionist Maria refused such statements from Dorval Mayor or any city representatives. She further told, such hoax news are circulating for more than 10 years in different city names.
Please Wait while comments are loading...