For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பார்டனுக்கு கட்அவுட், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கெட்அவுட் சொல்லும் மைக்ரோசாப்ட்?

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதிலாக புதிய பிரவுசரை ரகசியமாக உருவாக்கி வருகிறது என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதிலாக ஸ்பார்டன் என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய பிரவுசரை ரகசியமாக உருவாக்கி வருகின்றது. அந்நிறுவனம் வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி வின்டோஸ் 10ஐ வெளியிடும்போது இந்த புதிய பிரவுசரை அறிமுகப்படுத்துகிறது. புதிய பிரவுசர் கூகுளின் குரோம் பிரவுசர் போன்று இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Is Microsoft about to kill off Internet Explorer?

மேலும் ஸ்பார்டன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. ஸ்பார்டன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 12 இல்லையாம். வின்டோஸ் 10 உடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11ஐயும் மைக்ரோசாப்ட் வெளியிடுகிறது.

போட்டியை சமாளிக்கவே மைக்ரோசாப்ட் ஸ்பார்டன் பிரவுசரை உருவாக்கி வருகிறது. பில் கேட்ஸ் துவங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இருப்பினும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங்கில் மைக்ரோசாப்ட் தான் முன்னணி நிறுவனமாக உள்ளது.

ஐபோன், ஐபேட்டுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் போன், வின்டோஸ் பவர்ட் டேப்லெட் ஆகியவற்றை அண்மை காலங்களில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Microsoft is reportedly secretly developing a new browser codenamed Spartan. Spartan will be released along with Windows 10 on january 21st.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X