For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ருட்: கடந்த ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சாட்லாஃபை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலியை தலையை துண்டித்து கொலை செய்து அந்த வீடியோவை கடந்த 19ம் தேதி வெளியிட்டனர். அந்த வீடியோவில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர்.

ISIS beheads US journalist Steven Sotloff

இந்நிலையில் அவர் ஸ்டீவனின் தலையை துண்டித்து கொன்று அந்த வீடியோவை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் விவரம் வருமாறு,

வீடியோவில் ஸ்டீவன் ஆரஞ்சு நிற உடை அணிந்து மண்டியிட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உள்ளார். ஸ்டீவன் வீடியோவில் கூறுகையில், ஒபாமா, உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில் தலையிடுவது அமெரிக்க மக்களின் உயிரை காக்க வேண்டும். ஆனால் உங்கள் தலையீட்டுக்கு நான் ஏன் என் உயிரை பறிகொடுக்க வேண்டும்? நான் அமெரிக்க குடிமகன் இல்லையா? என்று கேட்டுள்ளார்.

ISIS beheads US journalist Steven Sotloff

ஸ்டீவன் அருகில் நின்ற தீவிரவாதி இங்கிலாந்து நாட்டவர் போன்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், நான் வந்துவிட்டேன் ஒபாமா. உங்களின் கொடூரமான வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, எச்சரிக்கையையும் தாண்டி தாக்குவது ஆகியவற்றால் தான் நான் திரும்பி வந்தேன் என்று கூறிவிட்டு ஸ்டீவனின் தலையை துண்டித்துவிட்டார்.

{ventuno}

31 வயதான ஸ்டீவன் கடந்த 2013ம் ஆண்டு சிரியாவில் காணாமல் போனார். தீவிரவாதிகள் எச்சரித்தும் அமெரிக்கா ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்க 350 ராணுவ வீரர்களை பாக்தாதுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

English summary
ISIS terrorists have beheaded another American journalist named Steven Sotloff and released the video on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X