For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்குகிறது இஸ்ரேல்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல் அவிவ்: ஈராக்கை பிரித்து குர்திஸ்தான் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் குர்து இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீண்டகாலமாகவே குர்து இன மக்களுக்கு என தனியே ஒரு நாட்டை அமைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதைப் போல குர்திஸ்தானில் ஒசாலன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆனால் 1999ஆம் ஆண்டு கென்யாவில் ஒசாலன் கைது செய்யப்பட்டு பின்னர் துருக்கியிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் வாடி வருகிறார்.

Israel says not working for Iraqi Kurd independence

அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்து

இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கிறது. இந்தப் போரை குர்து இன மக்கள் முழுமையாக ஆதரித்தனர். ஏனெனில் லட்சக்கணக்கான குர்து இன மக்களை சன்னி முஸ்லிமான சதாம் உசேன் ஈவிரக்கமின்றி படுகொலை செய்தார் என்பதற்காகவே அமெரிக்காவை குர்து இனம் ஆதரித்தது.

சுயாட்சி தேசம்..

அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில் குர்திஸ்தான் ஒரு தனிநாட்டுக்கு முந்தைய நிலைமையான முழுமையான சுயாட்சி பிரதேசமாக திகழ்கிறது. அங்கே தனிநாடு பிரகடனத்தைத் தவிர ஒரு தனிநாட்டுக்குரிய அனைத்து அம்சங்களுமே நடைமுறையில் இருந்து வருகின்றன.

உள்நாட்டு போர்

இந்தப் பின்னணியில் ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. இதனால் ஈராக் நாடே சன்னி, ஷியா முஸ்லிம்கள் பிரதேசமாகவும் குர்து இன பிரதேசமாகவும் பிளவுபடும் என்று கூறப்பட்டு வருகிறது.

குர்திஸ்தான்?

அத்துடன் குர்து இன மக்கள் தங்களுக்கான தனிநாட்டை பிரகடனம் செய்வார்கள்; இதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நெடன்யாகு, ஈராக்கில் சன்னி இயக்கத்தினர் பெற்ற வெற்றிக்கு பதில் நடவடிக்கையாக, குர்து தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், குர்து இன மக்கள், போராளிகள்... அவர்கள் சுதந்திரம் பெறத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்திருக்கிறார்கள் என்றும் நெடன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவுத்துறற அமைச்சர்

அதே நேரத்தில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சரோ, நாங்கள் குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்க உதவ மாட்டோம் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காதான் காரணம்..

அண்மையில் குர்திஸ்தான் மாகாணத்துக்கு சென்ற அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஒன்றுபட்ட ஈராக்கை வலியுறுத்தியிருந்தார். இதனாலேயே இஸ்ரேல், இந்த விவகாரத்தில் குழப்பமான நிலையை மேற்கொள்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Israeli Foreign Minister Avigdor Lieberman described Iraqi Kurdish independence as a fait accompli on Monday but said his country was taking no action to help the Kurds achieve formal statehood. The remarks appeared aimed at heading off potential confrontation with the United States, which wants to keep Iraq united, after Israeli Prime Minister Benjamin Netanyahu on Sunday called for support for the emergence of a Kurdish state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X