For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர்ல.. சுவையான.. அருமையான.. மொறுமொறு.. அதுவும் விண்வெளியில் சுடச் சுட 3 மணி நேரம் சுட்டெடுத்தது!

3 மணி நேரத்தில் விண்வெளியில் குக்கீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

நாசா: நாம இன்னும் டாஸ்மாக்குக்கு எதிரா போராடிட்டிருக்கோம்.. 5ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வா என்று அதிர்ச்சியில் அலை பாய்ந்து கொண்டிருக்கோம். ஆனால் அமெரிக்காக்காரன் வானத்தில் குக்கீஸ் சுட்டு சாப்பிட ஆரம்பிச்சுட்டான்..!

ஆம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் விண்வெளி வீரர்கள். இதுதான் விண்வெளியில் சமைக்கப்பட்ட முதல் குக்கீஸ் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

 iss astronauts cook first space cookies and took 3 hours to make it

இதற்கான முயற்சிகளை விண்வெளி வீரர்கள் சில காலமாக செய்து வந்தனர். அவர்களின் முயற்சி தற்போது வெற்றியில் முடிந்து அனைவரையும் மகிழ வைத்துள்ளது. இது போன டிசம்பர் மாதம் நடந்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பார்மிடானோ என்பவர்தான் இந்த குக்கீஸை தயாரித்துள்ளார். அவருக்கு உதவியாக நாசாவின் அதாவது அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோ இருந்துள்ளார். சாக்லேட் கலந்த சிப் குக்கியை இவர்கள் சோதனை முறையில் தயாரித்து அசத்தியுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது நல்ல டேஸ்ட்டா வந்திருக்காம் இந்த இரண்டு பேரும் தயார் செய்த குக்கீஸ்.

சவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்? பகீர் டிவிஸ்ட் சவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்? பகீர் டிவிஸ்ட்

என்ன ஒரு கஷ்டம்னா.. பூமியில் தயாரிக்கும் நேரம் போல குறுகிய நேரத்தில் இதை தயாரிக்க முடியவில்லையாம். ஒரு குக்கியை தயாரிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகி விட்டதாம். அது ஒன்றுதான் பெரும் சிரமமாக இருந்ததாம். இதுவே பூமியாக இருந்தால் கால் மணி நேரத்தில் சுட்டுத் தள்ளி விடலாம் என்பது நினைவிருக்கலாம். இருந்தாலும் 3 மணி நேரம் கஷ்டப்பட்டாலும் கூட சூடான சுவையான குக்கீஸை தயாரிக்க முடிந்ததுதான் இப்போது சாதனை.

மொத்தம் 3 குக்கீஸை இந்த இரட்டையர் குழு தயாரித்துள்ளது. முதல் குக்கி 2 மணி நேரம் ஆச்சாம். 2வது குக்கிக்கு 25 நிமிஷமும், 3வது குக்கிக்கு 75 நிமிஷமும் எடுத்துள்ளது. நல்ல சுவையான குக்கியாக அவை மாற முறையே 120 மற்றும் 130 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனவாம். இதை கிறிஸ்டினா டிவிட்டரில் போட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இந்த குக்கீஸை தயாரிக்க விசேஷமான ஒரு அவனையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதை விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவதற்கேற்ப வடிவமைத்துள்ளனர். அந்த வேலையைச் செய்தது நானோரேக்ஸ் அன்ட் ஜீரோ கிச்சன் என்ற நிறுவனம். அதேபோல பிரபலமான ஹில்டோன் ஹோட்டல் குரூப் குக்கீஸைத் தயாரிக்கத் தேவையான பொருட்களை சப்ளை செய்துள்ளது.

இதென்ன பிரமாதம்.. இந்தியர்கள் மட்டும் விண்வெளி நிலையத்திற்குப் போகட்டும்.. சாம்பார் சாதம் வச்சு.. கேரட் பீன்ஸ் பொறியல் வச்சு.. அப்பளம் வடை பாயாசத்தோடு வாழை இலையில் சாப்பாடு பரிமாறி.. செமத்தியான விருந்தே ரெடி பண்ணி அசத்திருவாங்க பாருங்க.. எதுவும் நடக்கும்போது இது மட்டும் நடக்காமலா போய் விடும். காத்திருப்போம்.

English summary
iss astronauts cook first space cookies and took 3 hours to make it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X