மனித இனத்திற்கே பேராபத்து.. எலான் மஸ்க் சொன்ன மாதிரியே நடக்குது பாருங்க.. உறைந்த உலக நாடுகள்
டோக்கியோ: ஜப்பானின் மக்கள் தொகை 2024 ஆம் ஆண்டில் 9 லட்சத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இது 1968 இல் தரவுகள் பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு மிக அதிகமான சரிவாகும். அரசு புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானிய மக்கள் தொகை தொடர்ந்து 16வது ஆண்டாக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த மக்கள் தொகை 12.43 கோடியாக உள்ளது என்று பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே தெரிவித்துள்ளது.
நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் மொத்த மக்கள் தொகையில் 30% ஆகவும், 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் 60% ஆகவும் உள்ளனர். ஜப்பானின் மக்கள் தொகை சரிவு குறித்து பிரதமர் ஷிகேரு இஷிபா, "இது ஒரு அவசரநிலை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சரிவை எதிர்கொள்ள அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

என்.எச்.கே தகவல்படி, டோக்கியோ ஜப்பானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு 1.4 கோடி மக்கள் வாழ்கின்றனர். தலைநகரிலும், சிபா மாகாணத்திலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஜனவரி 1, 2025 நிலவரப்படி ஜப்பானில் உள்ள வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 36.7 லட்சமாக இருந்தது. இது 2013 இல் பதிவு செய்யப்பட்டதிலிருந்து இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
ஜப்பான் மக்கள் தொகை - எலான் மஸ்க் அறிவிப்பு
சமீபத்தில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை ஒன்று பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடக்க தொடங்கி உள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. அதாவது பிறப்பு விகிதம் குறைந்து மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க மக்கள் தொகை பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. மக்கள் தொகை வேகமாக உயர்கிறது என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இப்போது திடீரென மக்கள் தொகை குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சீனாவில் கூட இரண்டு குழந்தை முறை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது.
சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது. ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து கஷ்டப்படும் நிலைக்கு சென்றது. இதையடுத்து சீனா புதிய குடும்ப கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 10 குழந்தைகளை பெற்றுக்கொண்டால்.. கடைசி குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மக்கள் தொகை வேகமாக குறைவது தற்போது பல நாடுகளுக்கு பிரச்சனை ஆகி உள்ளது. எலான் மஸ்க் இதே பிரச்சனையை சுட்டிக்காட்டி உள்ளார்.
உலக அளவில் பிறப்பு விகிதம் வேகமாக குறைகிறது. - 1950: ஒரு பெண்ணுக்கு 4.9 குழந்தைகள் வீதம் பிறந்தது. தற்போது - 2023: ஒரு பெண்ணுக்கு 2.3 குழந்தைகள் வீதம் பிறக்கிறது. உலக மக்கள் தொகை சரிவு மக்கள் உணர்ந்ததை விட வேகமாக ஏற்படுகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும். உடனே மக்கள் தொகை உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அதிலும் ஐரோப்பா மோசமாக மாறிவிட்டது. அங்கே 1.4 குழந்தைகள் வீதம்தான் ஒரு பெண்ணுக்கு பிறக்கிறார்கள். ஐரோப்பா அழிய தொடங்கிவிட்டது. அங்கே பெண்கள் இன்னும் 2 குழந்தைகள் வீதம் கூடுதலாக பெற்றுக்கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் ஐரோப்பா மக்கள் தொகை மாயமாகிவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பின்வரும் நாடுகளில் மக்கள் தொகை கடுமையாக சரிந்து உள்ளது
1. தென் கொரியா: 88%
2. சீனா: 83%
3. தாய்லாந்து: 81%
4. ஜப்பான்: 80%
5. ஈரான்: 75%
6. பிரேசில்: 74%
7. கொலம்பியா: 72%
8. மெக்சிகோ: 72%
9. போலந்து: 71%
10. துருக்கி: 70%
11. ரஷ்யா: 69%
12. சவுதி அரேபியா: 69%
13. மலேசியா: 68%
14. மொராக்கோ: 67%
15. உக்ரைன்: 67%
16. போர்ச்சுகல்: 66%
17. இத்தாலி: 66%
18. கனடா: 65%
19. இந்தியா: 65%
20. பெரு: 65%
21. பங்களாதேஷ்: 64%
22. மியான்மர்: 63%
23. ஸ்பெயின்: 63%
24. வியட்நாம்: 62%
25. இந்தோனேசியா: 61%
26. அல்ஜீரியா: 60%
27. எகிப்து: 59%
28. நேபாளம்: 59%
29. பிலிப்பைன்ஸ்: 58%
30. வெனிசுலா: 57%
31. தென்னாப்பிரிக்கா: 54%
32. அமெரிக்கா: 54%
33. ஆஸ்திரேலியா: 53%
34. பின்லாந்து: 52%
35. ஸ்வீடன்: 51%
36. பிரான்ஸ்: 51%
37. நெதர்லாந்து: 50%
38. ஐஸ்லாந்து: 50%
39. அர்ஜென்டினா: 49%
40. நார்வே: 49%
41. நியூசிலாந்து: 48%
42. டென்மார்க்: 48%
43. பெல்ஜியம்: 47%
44. ஆஸ்திரியா: 46%
45. கென்யா: 46%
46. ஜெர்மனி: 45%
47. சுவிட்சர்லாந்து: 45%
48. லக்சம்பர்க்: 44%
49. ஏமன்: 44%
50. அயர்லாந்து: 43%
51. கானா: 43%
52. உஸ்பெகிஸ்தான்: 42%
53. ஈராக்: 41%
54. எஸ்டோனியா: 41%
55. ஐக்கிய இராச்சியம்: 40%
56. லாட்வியா: 40%
57. லிதுவேனியா: 39%
58. செக் குடியரசு: 38%
59. பாகிஸ்தான்: 38%
60. ஸ்லோவாக்கியா: 37%
61. ஹங்கேரி: 36%
62. ஸ்லோவேனியா: 35%
63. குரோஷியா: 34%
64. போஸ்னியா & ஹெர்சகோவினா: 33%
65. செர்பியா: 32%
66. மாண்டினீக்ரோ: 31%
67. வடக்கு மாசிடோனியா: 30%
68. அல்பேனியா: 29%
69. பல்கேரியா: 28%
70. ருமேனியா: 27%
71. மால்டோவா: 26%
72. கிரீஸ்: 25%
73. சைப்ரஸ்: 24%
74. இஸ்ரேல்: 23%
75. ஜோர்டான்: 22%
76. நைஜீரியா: 21%
77. லெபனான்: 21%
78. சிரியா: 20%
79. ஜமைக்கா: 19%
80. கொரிய ஜனநாயக குடியரசு: 10%












Click it and Unblock the Notifications