கிம் கர்தாஷியான் துப்பாக்கி முனையில் கடத்தல்- பாரிசில் பரபரப்பு
பாரிஸ் : அமெரிக்கவின் டிவி நடிகையான கிம் கர்தாஷியன் பாரீஸ் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் இருவர் கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கடத்தி செல்லும்போது அவரை கடுமையாக தாக்கியதாகவும் அதனால் எந்தக் காயமும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கிம் கர்தாஷியான் அமெரிக்க டிவி நடிகையாகவும் பிரபல மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், பாரீசில் நடந்து வரும் மாடல் ஷோவில் கலந்து கொள்வதற்காக தனது அம்மா, சகோதரிகளுடன் வந்திருந்த கிம் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது போலீஸ் உடையில் முகமூடி அணிந்து வந்த இருவர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிறன்று மாலை நடந்துள்ளது. கிம் கார்தஷியானை கடத்தியபோது, மர்மநபர்கள் அவரை தாக்கியதாகவும், எனினும் அவருக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கிம்மின் கணவர் கன்யே வெஸ்ட் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து பாரீஸ் விரைந்துள்ளதாக பாரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி போஸ், ரியாலிட்டி ஷோவுக்காக நிர்வாண செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவிடுவது என ரசிகர்களை சூடேற்றி வந்தார் கிம். கிம் கார்தாஷியானின் செயல்பாடுகளை பிடிக்காத யாரோதான் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications