செமல்ல.. பிரீத்தி ஜிந்தாவை 'காப்பாற்றிய' ஷாருக்கான்.. கேகேஆர்-பஞ்சாப் போட்டியில் நடந்தது என்ன?
துபாய்: ப்ரீத்தி ஜிந்தாவை ஷாருக்கான் எத்தனை முறைதான் காப்பாற்றுவது.. இதோ பாருங்க நேற்றைய போட்டியிலும், அவருக்கு ஷாருக் கான்தான் ஹீரோயிசம் செய்து காப்பாற்ற வேண்டியதாயிற்று என்று கண் சிமிட்டுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவிற்கு உதவி செய்தாரா என்று நினைத்துவிட வேண்டாம். இது விஷயமே வேறு.
நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் இடையே நடைபெற்றதே அந்த போட்டி பற்றியது.

சுழல் பந்து வீச்சு
முதலில் பேட் செய்த கொல்கத்தா, நல்ல கவுரமான ஸ்கோராக 165 ரன்கள் எடுத்தது. 2வது பேட் செய்த பஞ்சாப் ஆரம்பத்தில் ரன் அடிக்க நேரம் எடுத்தது. காரணம், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்றோரின் பந்து வீச்சுதான் இதற்கு காரணம்.

பரபரப்பு சூழ்நிலை
இதன் காரணமாக 14 ஓவர்கள் முடிவில், 36 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க வேண்டிய பரபரப்பான நிலை ஆட்டத்தில் உருவானது. 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 131 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகுதான் களத்திற்கு வந்தார் ஷாருக்கான். அதாவது பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்.

வந்தார் ஷாருக்கான்
ஷாருக்கான், ஹூடா அவுட்டான பிறகு, 17வது ஓவரில்தான் களத்திற்கு வந்தார். முதல் பந்து 2, 2வது பந்தே சிக்சர் விளாசினார். இதன்பிறகு ஷாருக்கான் ஆட்டம் ருத்ர தாண்டவமாகத்தான் இருந்தது.
Recommended Video

சிக்சர் மழை
ராகுலுடன் பார்ட்னர்ஷிப் போட்டு விளாசித் தள்ளினார் ஷாருக்கான். வெங்கடேஷ் ஐயர் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு விளாசி பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார் ஷாருக்கான். ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நேரத்தில் வழக்கம்போல தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார் ராகுல். அப்போது அவருக்கு கை கொடுத்து பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார் ஷாருக்கான்.

பிரீத்தி ஜிந்தா
பல திரைப்படங்களில் ஆபத்தான நேரத்தில் பிரீத்தி ஜிந்தாவை காப்பாற்றியவர் நடிகர் ஷாருக்கான். இப்போது அவரது டீமையும் ஒரு ஷாருக்கான்தான் காப்பாற்றியுள்ளார் என்று டைமிங்கோடு பாராட்டுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் வெறும் 9 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார் ஷாருக்கான்.

டெல்லி கேபிடல் தகுதி
பஞ்சாப் அணி வெற்றி பெற்றதன் மூலம், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல் அணி, பிளேஆப்புக்கு தகுதி பெற்று விட்டது. சென்னை முதலில் தகுதி பெற்ற நிலையில், 2வதாக டெல்லி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications