Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் பரபரப்பு.. மசூதியாக மாற்றப்பட்ட கிருஷ்ணர் கோவில்! சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிருஷ்ணர் கோவில் ஒன்று மசூதியாகவும் மதர்சாவாகவும் மாற்றப்பட்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாதிகாபாத் அருகே அஹமத்புர் பகுதியில் பல ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோயில் அமைந்து இருந்ததாகவும், அது மசூதி மற்றும் மதர்சாவாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். 2 பசு மாடுகளுடன் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பதை போன்ற சிலை கொண்ட அந்த கோயில் அப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருந்ததாகவும், தற்போது அது மசூதியாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

 Krishna temple being converted into a mosque in Pakistan

அந்த வீடியோவில் கோயிலும் பிரதான வாயில் அடைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அந்த வீடியோவிலேயே மதகுரு ஒருவர் விளக்கம் அளிக்கிறார். அவர் கூறுகையில், "முன்பு இது இந்து கோயிலாக இருந்து வந்தது. பூஜைகள் நடைபெற்று வந்தன. 50 ஆண்டுகளுக்கு முன் இது மசூதியாக மாற்றப்பட்டு இங்கு குழந்தைகளை குர்ஆன் ஓதுகிறார்கள். நான் இந்தியாவில் இருந்து வந்தவர். ராஜஸ்தானின் பாலைவன பிரதேசத்தை சேர்ந்தவன். இது இந்து கோயில்களின் கட்டிடக் கலையை கொண்டது." என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலை மசூதியாக மாற்றுவது அதன் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சீர்குலைக்கும் செயல் என்ற விமர்சனங்கள் எழுந்து உள்ளன. கோயிலின் முன்பக்க வாயில் மற்றும் அங்கு உள்ள கிருஷ்ணர் சிலையின் நிலையை வைத்து அதை அவர்கள் முறையாக பராமரிக்காமல் சிதலமடைந்து இருப்பது தெரிவதாக வரலாற்று ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+