ஒளிரும் குரங்கு.. மின்னும் பசு.. பளிச்சிடும் சிங்கம்.. வண்ண விளக்கு கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

சிகாகோ: கிறிஸ்துமஸ் வந்தாச்சு.. அடுத்து புத்தாண்டு வரப் போகுது.. விடுமுறை நாட்கள் களை கட்டியுள்ளன. பள்ளிக்கெல்லாம் விடுமுறை விட்டாச்சு. நாமும் ஜாலியா விடுமுறை கொண்டாட ஆரம்பிச்சாச்சு. ஒவ்வொரு ஊரிலும் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

சிகாகோ நகரில் ஒரு விலங்கியல் பூங்காவையே இந்த விடுமுறை கொண்டாட்டத்திற்காக வருடம் வருடம் டிசம்பர் மாதம் விளக்குகளால் அலங்கரித்து அசத்துகிறார்கள்.

அந்த வகையில் இந்த கொண்டாட்டமும் படு விசேஷமானதுதான். வாங்க அதைப் பற்றிப் பார்ப்போம்:

இரவைப் பகலாக்கும் விளக்குகள்

இரவைப் பகலாக்கும் விளக்குகள்

வண்ண வண்ண லைட்டுகளை இரவில் பார்த்து கொண்டு நடப்பது பெரும் சுகம். அதிலும் சிறப்பு என்னவென்றால் இந்த கொண்டாட்டம் நடப்பது விலங்கியல் பூங்கா என்பதால் விளக்கு வடிவில் எல்லா விலங்குகளையும் பார்க்க முடியும்.

ஒளிரும் குரங்கு

ஒளிரும் குரங்கு

ஒட்டகச்சிவிங்கி, பசு, குரங்கு , சிங்கம், வரிக்குதிரை, புலி என்று நீண்டு கொண்டே போகிறது அந்த வரிசை.பறவைகள் மட்டும் என்ன சும்மாவா அவற்றையும் மரத்தில் லைட்டாக பார்க்க வைத்து விட்டார்கள்.

எல்லாமே அழகு தான்

எல்லாமே அழகு தான்

மீன்கள் நீந்தும் நீர் இருக்கும் இடத்தில அந்த வகை உயிரினங்களை எல்லாம் லைட்டில் காணலாம். டால்பின், நண்டு, ஆமை,ஜெல்லி பிஷ் என்று அவர்கள் ஏற்படுத்திய விளக்கு ஒளியின் பிம்பத்தை தண்ணீரில் காண்பது அலாதி அழகு. விடுமுறை கொண்டாட்டத்திற்கான சிறப்பு இசை பாடலோடு கண்கள் சிமிட்ட மறந்து நின்று பார்க்க வைக்கும் லைட் ஷோ கூட உண்டு.

பனியில் பல கைவண்ணம்

பனியில் பல கைவண்ணம்

கல்லிலே சிற்பம் செய்து பார்த்திருப்போம். ஐஸ் கட்டியிலே செய்ய முடியுமா என்றால் எப்படி என்று யோசிப்போம். ஆனால் இங்கு ஐஸ் கார்விங் எனப்படும் ஐஸ் கட்டியில் அழகு அழகாய் உருவங்கள் செய்து கலைஞர்கள் அசத்தும் காட்சியும் உண்டு. லைட்டில் அலங்கரிக்கப்பட்ட ராட்ச ராட்டினம், என்று விளக்குகளுக்குள்ளே நடைபோட்டு விடைபெறும்போது குழந்தைக்குரிய குதூகலம் மனதில் மிகுந்து இன்னும் ஒரு படி மேல போய் எதோ சிவப்பு கம்பளத்தில் நடக்கும் ராஜா ராணியைப் போல உணர்வு கட்டாயம் வந்து ஒட்டிக் கொள்கிறது.

அனுமதி இலவசம்

அந்த விளக்குகள் போல ஒளிர்ந்த முகத்தோடு விடை பெறுகிறோம். நீங்க சிகாகோவில் இருந்தால் கட்டாயம் லிஙகான் பூங்காவை விசிட் அடிங்க. அனுமதி இலவசம் தான் என்பது சிறப்பு . நீங்க வேறு இடத்தில இருந்தால் இந்த வீடியோவில் கண்களை கொள்ளைகொள்ளும் அந்த லைட் எல்லாம் கண்டுகளிக்கலாம்.

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+