For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆஹா வந்துருச்சு.. ஆசையில் ஓடி வந்தேன்".. 80 வயது பாட்டியை ஈவ் டீசிங் செய்த தாத்தா!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் 80 வயது மூதாட்டி ஒருவரை பின் தொடர்ந்து சென்று தினமும் ஈவ் டீசிங் செய்த 85 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏதோ இளைஞர்கள்தான் பெண்களை தொடர்ந்து சென்று ஈவ் டீசிங் செய்வார்கள் என்ற நிலைமை மாறி தற்போது பல்லு போன தாத்தாக்களும் இந்த டிரெண்டை பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு உதாரணம்தான் இந்த 85 வயது தாத்தா செய்த ஈவ் டீசிங் ஸ்டோரி. ஜப்பானே இந்த கைதால் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

இதுல சாதனை வேற:

கைது செய்யப்பட்ட 85 வயதான அம்முதியவர்தான் உலகின் முதல் வயது முதிர்ந்த "ரோமியோ" என்ற சாதனையைப் படைத்துள்ளாராம்.

மருத்துவமனைப் பழக்கம்:

கைது செய்யப்பட்ட "டேக்கோ நிட்டா" என்ற அந்த முதியவரின் மனைவி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருடன் 80 வயது மூதாட்டி ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் முதியவருக்கும், அந்த மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின் தொடர்ந்து தொல்லை:

இந்நிலையில் அந்த முதியவரின் மனைவி இறந்து விட்டதைத் தொடர்ந்து தனிமையில் வாடிய அவர் அந்த மூதாட்டியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார். இதை தவிர்க்குமாறு மூதாட்டி "வாக்கிங் ஸ்டிக்கால்" எச்சரித்தும், முதியவர் கேட்கவில்லை.

வா செல்லம்.. வெளியே:

போனில் "நான் உன் வீட்டிற்கு வெளியில் காத்திருக்கின்றேன். வந்து பார் " என்றெல்லாம் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியுள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த மூதாட்டி போலீசில் புகார் செய்து விட்டார். அதை பெற்றுக்கொண்ட போலீசாரும் அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.

முதுமை தூண்டும் குற்றங்கள்:

ஜப்பானில் அதிக வாழ்நாள் இருப்பதால் தான் இதுபோன்ற வயதானவர்கள் குற்றச் செயலில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.

English summary
An 85-year-old Japanese man has earned the reputation of being perhaps the world's oldest stalker after making unwanted amorous advances to an 80-year-old great grandmother.The granddad fell for the octogenarian apple of his eye when they shared a hospital room with his wife, who has since died.On his release from hospital and later entering the lonely life of an aged widower, Takeo Nitta, from Hashimoto - 250 miles from Tokyo - remembered the granny from the adjoining bed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X