38 பேரை கொன்ற நர்ஸை திருமணம் செய்ய போட்டா போட்டி: என்ன கொடுமை சார் இது?
ரோம்: இத்தாலியில் 38 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸை திருமணம் செய்ய பலர் போட்டி போடுகிறார்கள்.
இத்தாலியில் உள்ள லூகோ நகரைச் சேர்ந்தவர் டேனியலா போகியாலி(42). அவர் அதே நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவர் பொறுப்பில் இருந்த 86 நோயாளிகளில் 38 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் மரணம் அடைந்த 78 வயது பெண்ணின் உடலில் அளவுக்கு அதிகமாக பொட்டாஷியம் குளோரைட் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து தான் நோயாளிகளின் மர்ம மரணத்திற்கு டேனியலா தான் காரணமாக இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டேனியலாவை கைது செய்தனர்.
டேனியலாவை பொறுத்த வரை யார் யார் எல்லாம் எரிச்சல் ஊட்டும் வகையில் உள்ளார்களோ அவர்களை எல்லாம் அவர் பொட்டாஷியம் வைத்து கொன்றுள்ளார். பொட்டாஷியம் 48 மணிநேரத்திற்குள் உடலில் இருந்து மறைந்துவிடும் என்பதால் டேனியலா எளிதில் சிக்கவில்லை.
இந்நிலையில் டேனியலா பிணங்களுடன் செல்ஃபி எடுத்தது தெரிய வந்துள்ளது. ஒரு பெண் பிணத்திற்கு அருகே அவர் நின்று கொண்டு இரண்டு பெரு விரல்கைளை உயர்த்தியபடி செல்ஃபி எடுத்துள்ளார். மற்றொன்றில் வேறு ஒரு பிணத்திற்கு அருகே தலையை வைத்து வாயை திறந்தபடி போஸ் கொடுத்துள்ளார் டேனியலா.
இந்த புகைப்படங்கள் தற்போது மீடியாக்களுக்கு கிடைத்துள்ளது. இவற்றை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொலை வழக்கை எதிர்கொண்டு வரும் அவரை திருமணம் செய்து கொள்ள பலர் போட்டி போடுகிறார்கள். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications