For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் காவல் நிலையத்தை தாக்கி 13 போலீசாரை கொன்ற வழக்கு: 188 பேருக்கு மரண தண்டனை

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் 188 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது கெய்ரோ அருகில் உள்ள காவல் நிலையம் தாக்கப்பட்டதில் 13 போலீசார் கொல்லப்பட்டனர்.

Mass death sentence: Egypt court sentences 188 people to death

இச்சம்பவம் தொடர்பாக 188 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையின் விவரம் நாட்டின் உயரிய அதிகாரம் கொண்ட இஸ்லாமிய மத குருவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரின் முடிவிற்கு பின்னர் ஜனவரி 24 ஆம் தேதி தண்டனை உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் 135 பேர் மட்டுமே ஆஜர் செய்யப் பட்டிருந்தனர்.

English summary
An Egyptian court has sentenced 188 people to death for a violent attack on a police station in the restive town Giza after the ouster of president Mohamed Morsi last year and the matter will now go before the country’s top religious authority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X