For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம்

Google Oneindia Tamil News

டொமினிகா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று டொமினிகன் அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

டொமினிகன் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மொகுல் சோக்ஸி (62 வயது) தன்னை ஆன்டிகுவாவில் இருந்து கடத்திக்கொண்டு வந்ததாக மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க கூடாது என்றும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வழக்கறிஞ்ர் வாதிட்டுள்ளார், மத்திய அரசுக்கு இநத் வாதம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

ஆனால் ஆன்டிகுவாவிலிருந்து கடத்தப்பட்டதாக மொகுல் சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மொகுலை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி டொமினிகாவிற்கு கொண்டு வந்துள்ளனர் என்று வாதிட்டுள்ளனர்.. நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால், அவர் மீண்டும் ஆன்டிகுவாவுக்கு அனுப்பப்படுவார், வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகள் சப்போர்ட்

எதிர்க்கட்சிகள் சப்போர்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவாகரம் வெளியே தெரியவந்தால் வைர வியாபரியான மொகுல் சோக்ஸி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, இந்தியாவில் இருந்து தப்பிவந்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு நேரடியாக நாடு கடத்த வேண்டும் என்று டொமினிகா அரசிடம் ஆன்டிகுவா பிரதமர் யோசனை கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

டொமினிகாவில் முகாம்

டொமினிகாவில் முகாம்

இந்நிலையில் இந்திய அரசு எப்படியாவது டொமினிகா நாட்டில் இருந்து மொகுல் சோக்ஸியை ஆன்டிகுவாவிற்கு செல்லவிடாமல் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்க அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்

முடிவு தெரியும்

முடிவு தெரியும்

கடந்த வாரம் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதிலிருந்து தப்பிக்க கியூபா செல்வதற்கு மொகுல் சோக்ஸி டொமினிகா வழியாக செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸி, வீடியோ-கான்பிரன்ஸ் வழியாக நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையில் கலந்து கொண்டார். அவர் தற்போது ஒரு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று மொகுல் சோக்ஸி நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிந்துவிடும்.

English summary
The Dominican government argued in court today that Mehul Choksi -- the fugitive diamond trader wanted over the ₹ 14,000 crore loan fraud at the Punjab National Bank -- be deported to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X