அதிரடியாக இறங்கிய ராணுவம்.. சர்வதேச போதை பொருள் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை.. உச்சக்கட்ட பதற்றம்!
மெக்சிகோ சிட்டி: உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளார். ராணுவ நடவடிக்கையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அமெரிக்க அதிபரான டிரம்ப் கூட இது தொடர்பாக வெளிப்படையாகவே மெக்சிகோ மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்க இதுவே காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எல் மென்சோ
இதற்கிடையே உலகின் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோவை மெக்சிகோ ராணுவம் கொன்றுள்ளது. மெக்சிகோ ராணுவம் எடுத்த தீவிர நடவடிக்கைகளில் அந்த நபர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வான்டஸ் என்றும் அறியப்படும் எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
வன்முறை
அவரது மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களிலும் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது.. ஜலிஸ்கோ உட்பட மெக்ஸிகோவின் பல மாநிலங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், ஆயுதம் ஏந்திய கும்பலால் முக்கிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் மெக்சிகோ நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜலிஸ்கோ மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலின்போது போதைப்பொருள் மன்னன் எல் மென்சோ படுகாயமடைந்துள்ளார். அவரை காப்பாற்ற மெக்சிகோ சிட்டிக்கு விமானம் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் வழியிலேயே உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
அமெரிக்கா+ மெக்சிகோ
எல் மென்சோவின் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG), கடந்த 10 ஆண்டுகளில் மெக்ஸிகோவின் மிகவும் சக்திவாய்ந்த க்ரைம் கும்பலாக உருவெடுத்தது. இது அமெரிக்கா சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலிலும் முக்கிய பங்காற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் அந்த கும்பலின் தலைவரை மெக்சிகோ அரசு கொன்றுள்ளது. அமெரிக்க உளவு துறை அளித்த தகவல்களை வைத்தே எல் மென்சோவை மெக்சிகா ராணுவம் காலி செய்துள்ளது.
எல் மென்சோ மரணத்திற்குப் பிறகு மெக்சிகோவில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாகாண அரசுகளோடு இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் அறிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications