"மர்ம சிக்னல்.." விண்வெளியில் இருந்த குழப்பம் நீங்கியது.. நீண்ட தேடுதலுக்கு பிறகு கிடைத்த பதில்
சியாட்டில்: நமது பால்வெளி மையத்தில் இருந்து பல காலமாகவே ஒரு மர்ம சிக்னல் வந்து கொண்டு இருந்தது. ஏலியன்கள் இந்த சிக்னல்களை அனுப்பலாம் என முதலில் ஆய்வாளர்கள் கருதினர். இருப்பினும், அதில் உறுதியான தகவல்கள் இல்லை. இதற்கிடையே ஒருவழியாக இந்த மர்ம முடிச்சை ஆய்வாளர்கள் சிலர் அவிழ்த்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
நமது பூமி உட்படக் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகிறது. நமது இந்த சூரியக் குடும்பம் உட்படப் பல நூறு கிரகங்கள் பால்வெளி மையத்தில் தான் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Milky Way கேலக்ஸி என்பார்கள். இந்த கேலக்ஸியில் இருந்து மர்மமான சிக்னல்கள் நீண்ட காலமாகவே வந்து கொண்டு இருந்த சூழலில், அதற்கான காரணத்தை இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எக்ஸைட்டட் டார்க் மேட்டர்
ஆரம்பத்தில் வேற்றுகிரகவாசிகள் இந்த சிக்னல்களை அனுப்பலாம் என ஆய்வாளர்கள் கருதினர். இது தொடர்பாகத் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்ட சூழலில், இது "எக்ஸைட்டட் டார்க் மேட்டர்" (excited dark matter) உடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என கிங்ஸ் கல்லூரி லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வாளர் டாக்டர் ஷியாம் பாலாஜி கூறுகையில், "பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்து நாம் கவனித்த எனர்ஜி மற்றும் வடிவம் போன்ற மர்மங்களுக்கு, நட்சத்திர வெடிப்புகள் போன்ற நன்கு அறியப்பட்ட வானியற்பியல் நிகழ்வுகள் முழுமையான விளக்கத்தை அளிக்கவில்லை. இது குறித்து தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒரு எக்ஸைடட் டார்க் மேட்டர் மாடல் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார்.
டார்க் மேட்டர் என்றால் என்ன
டார்க் மேட்டர் என்பது ஒளியை உமிழாத, பிரதிபலிக்காத அல்லது உறிஞ்சாத கண்ணுக்குத் தெரியாத ஒரு வகை பருப்பொருளாகும். பிரபஞ்சத்தில் கிட்டத்தட்டக் கால் பங்கு இந்த டார்க் மேட்டர் தான் இருக்கிறது. இருப்பினும், இதை நம்மால் நேரடியாக கவனிக்க முடியாது. இதனால் அதன் இயல்புகள் குறித்து நமக்குத் தெளிவாகத் தெரியாது. இப்போது மர்மமான சிக்னல்களான 511-கெவ் எமிஷன் லைன், 2 எம்இவி காமா-கதிர் தொடர்ச்சி, மற்றும் மத்திய மூலக்கூறு மண்டலம் குறித்து ஆய்வுகள் நடக்கிறது. இதை வைத்து டார்க் மேட்டரை புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.
இது டார்க் மேட்டர் பற்றியது. அடுத்து எக்ஸைடட் டார்க் மேட்டருக்கு வருவோம். எக்ஸைடட் டார்க் மேட்டர் என்பது, அதன் துகள்கள் மோதும்போது ஆற்றலை வெளியிடும் ஒரு நிகழ்வாகும். டார்க் மேட்டர் துகள்கள் மோதலின் போது ஆற்றலைச் சேமித்து, அதை பாசிட்ரான்களாக வெளியிடுகின்றன. இது கண்டறியப்பட்ட சிக்னல்களையும், பால்வெளியின் அசாதாரண வாயு அயனியாக்க முறைகளையும் விளக்கக்கூடும்.
மர்மத்திற்கு விடை
இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டால், வானியற்பியலின் நீண்டகாலமாக நிலவி வந்த மர்மத்திற்கு விடை கிடைக்கும். டார்க் மேட்டர் தன்மை மற்றும் நடத்தை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இது வெளிப்படுத்தும். செரென்கோவ் தொலைநோக்கி வரிசை ஆய்வகம் போன்ற எதிர்கால பயணங்கள் இந்தக் கோட்பாட்டைச் சோதிக்கும்.
விடை தெரியும்
இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "விண்வெளியில் நீண்டகாலமாக விளக்கப்படாத இந்த மர்மத்திற்கான விடை நமக்குக் கிடைத்துவிட்டது என்றால் அது எதிர்கால ஆய்வுகளுக்கு மிகவும் தெளிவான திசையை அளிக்கிறது" என்று ஆய்வின் இணை ஆசிரியரும், கோட்பாட்டுத் துகள் இயற்பியல் மற்றும் அண்டவியல் குழுவின் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளருமான டேமன் க்ளீவர் தெரிவித்தார்.
அவர் மேலும், "இதன் மூலம் எதிர்காலத்தில் பால்வெளி மண்டலத்தின் பிற நீண்டகால மர்மங்களுக்கு டார்க் மேட்டர் காரணமா என்பதை நாம் சோதிக்கலாம். அத்துடன், இந்த மர்மமான பொருளின் தன்மையை மேலும் புரிந்துகொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டார்.
-
நிலவில் லேண்டிங் இல்லை.. மறுபக்கம் போகும் விண்வெளி வீரர்கள்.. 10 நாட்களும் செய்யப்போவது என்ன? -
50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் பயணம்.. விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’ விண்கலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications