H-2-O என்றால் என்ன? வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில்
பங்களாதேஷ் அழகி ஒருவர் சொன்ன பதில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
Recommended Video

வங்கதேசம்: அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்... இப்போது கூட அது பங்களாதேஷ் சம்பவத்தில் தெரியவந்துள்ளது.
மிஸ் பங்களாதேஷ்' அழகி போட்டி 2 நாளுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஏராளமான அழகிகள் கலந்துகொண்டார்கள். இதில் வெற்றிபெறுவர்கள்தான் உலக அழகிப்போட்டியில் வங்கதேசம் சார்பில் கலந்துகொள்வார்கள்.

H20 கேள்வி
அதன்படி பல சுற்றுகள் இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறி முன்னேறி ஒருசிலல் இறுதி சுற்றுக்கு செலக்ட ஆகி விட்டார்கள். இப்போது இவர்களிடம் நடுவர்கள் அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்க வேண்டும். அதன்படி தங்கள் கேள்விகளை கேட்க தொடங்கினர். அப்போது, போட்டியில் பங்கேற்ற ஒருவரிடம், `H-2-O என்றால் என்ன ' என்ற அறிவியல் கேள்வியை கேட்டார்கள்.

அதிர்ச்சியில் நடுவர்கள்
அதற்கு ஒரு அழகி, "H2O என்றால், ரெஸ்டாரன்டா" என முகத்தை அப்பாவித்தனமாக வைத்து கொண்டு கேட்டார். இதனை கேட்ட நடுவர்கள் 'ஆ' வென வாயை பிளந்து பேச்சு வராமல் சிறிது நேரம் அதிர்ந்து உட்கார்ந்து விட்டார்கள். பிறகு மெதுவாக நடுவர்களில் ஒருவர் H-2-O என்றால் தண்ணீர் என்று விளக்கம் சொன்னார்.
வைரல் வீடியோ
உடனே அந்த பெண் சுதாரித்து, "இல்லை... இல்லை.. டாக்காவில் இப்படித்தான் ஒரு ரெஸ்டாரென்ட் இருக்கு. அதனாலதான் அப்படி சொன்னே என சமாளித்தார். நடுவர் கேட்ட கேள்வியும் அதற்கு அழகி அளித்த இந்த பதிலும்தான் வீடியோவாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அழகியை கலாய்த்து கிறுக்கி தள்ளுகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா
உலகில் எங்கு அழகிப்போட்டி நடைபெற்றாலும் அதில் வெறும் அழகை மட்டும் நடுவர்கள் பார்த்து மார்க் போடுவதில்லை. கூடவே பொது அறிவையும் செக் பண்ணித்தான் அந்த கிரீடத்தை தலையில் சூட்டுவார்கள். இப்படி, இதுவரை நடந்த உலக அழகி போட்டியிலேயே நம்மை ரொம்ப அதிர வைத்தவர் பிரியங்கா சோப்ராதான். கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவிடம், "தற்போது உயிரோடு இருக்கிறவர்களில் யார் மிகவும் வெற்றிகரமான பெண் என்று நினைக்கிறீர்கள்" என நடுவர் கேட்டார்.

அன்னை தெரசா
அதற்குப் பிரியங்கா சோப்ரா, "அன்னை தெரசா" என்றார். 1997-ம் ஆண்டே அன்னை தெரசா இறந்துவிட்டார். ஆனால், 2000-ம் ஆண்டு அவரது பெயரை சொன்னதும் நடுவர்கள் மட்டுமல்லாமல், உலகமே ஷாக் ஆகிவிட்டது. இப்போது பங்களாதேஷ் அழகி சொன்ன வீடியோவுடன், பிரியங்கா சோப்ரா பதில் சொன்ன வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த அழகியின் பதில்களை பார்த்து, கிழி கிழியென கிழித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications