For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் 5 நாட்களும் அமெரிக்காவில் மோடி பிசி: சுற்றுப்பயணத்தின் முழு விவரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடியின் பயண குறிப்பு இதுதான்.

செப்டம்பர் 26:

செப்டம்பர் 26:

  • நியூயார்க் விமான நிலையத்தில், பகல் 12.30 மணிக்கு விமானம் தரையிறங்கியதும் அமெரிக்காவுக்கான இந்திய துாதர், ஜெய்சங்கர், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் அசோக் முகர்ஜி வரவேற்பு அளிக்கின்றனர்.
    • நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, மோடியை சந்திக்கிறார்.
      • அமெரிக்க புற்றுநோய் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், 'நோபல்' பரிசு பெற்ற, ஹரால்ட் எலியட் வார்மஸ் உடன் மோடி சந்திப்பு.
செப்டம்பர் 27:

செப்டம்பர் 27:

  • நியூயார்க் நகரில் உள்ள, இரட்டை கோபுர இடிப்பு நினைவிடம் சென்று, 13 ஆண்டுகளுக்கு முன், தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல்.
    • பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே ஐ.நா. வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்குகிறார் மோடி.
      • ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன், நியூயார்க் நகரின் முன்னாள் மேயரும், தொழிலதிபருமான, புளூம்பெர்க் உடன் சந்திப்பு.
        • வருடாந்திர, 'குளோபல் சிட்டிசன்' விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு. இதற்காக, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கிற்கு, காரில் பயணம்.
          • மாலையில் பிரமாண்ட விழாவில் அமெரிக்காவில் வாழும் இந்திய பிரபலங்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 28:

செப்டம்பர் 28:

  • அமெரிக்காவின் சவுத் கரோலினா மாகாண பெண் கவர்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த, நிக்கி ஹாலேயுடன் சந்திப்பு. மற்றொரு மாகாணமான, லுாசியானாவின் கவர்னர், பாபி ஜிண்டாலுடன் பேச்சு.
    • நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான, 'மேடிசன் சதுக்க கார்டன்' அரங்கில், இந்தியர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு பங்கேற்பு. 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சி, 'டைம்ஸ் ஸ்கோர்' வளாகத்தில் ஒளிபரப்பு.
செப்டம்பர் 29:

செப்டம்பர் 29:

  • 'பார்ச்சூன் 200' எனப்படும், அமெரிக்காவின் மிகப் பெரிய, 200 தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மோடி உரையாற்றுகிறார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறும், இந்தியாவில், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் துணை நகரங்களை அமைப்பது குறித்தும் பேசுகிறார்.
    • அமெரிக்க பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், தனித்தனியாக பேச்சு.
      • முன்னாள் அதிபர், பில் கிளின்டன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், ஹிலாரி கிளின்டன் ஆகியோருடன் சந்திப்பு.
        • அமெரிக்க சிந்தனையாளர்கள் கூட்டமைப்பான, 'கவுன்சில் ஆப் பாரின் ரிலேஷன்ஸ்'சில், இந்திய வெளியுறவுத்துறை கொள்கை குறித்து பேச்சு.
          • மாலையில், வாஷிங்டன், ஆண்ட்ரூ விமானப்படை தள விமான நிலையம் சென்றடைதல்.
            • இரவில், வெள்ளை மாளிகையில், அதிபர், ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்பு.
செப்டம்பர் 30:

செப்டம்பர் 30:

  • வாஷிங்டன் நகரில் உள்ள, கருப்பினத்தவர்களின் தலைவர், மறைந்த மார்ட்டின் லுாதர் கிங் நினைவிடத்தில் மரியாதை. முன்னாள் அதிபர், ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்தில் அஞ்சலி; வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரக அலுவலகம் சென்று, அதன் வாயிலில் உள்ள, மகாத்மா காந்தி சிலைக்கு மாலையணிவித்தல்.
    • வெள்ளை மாளிகைக்கு பயணம்; 'ஓவல் ஆபீஸ்' வளாகத்தில், அதிபர் ஒபாமாவுடன் சந்திப்பு.
      • இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்; கூட்டறிக்கை வெளியீடு.
        • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி சார்பில், 'பாகி பாட்டம்' என்ற வளாகத்தில், துணை அதிபர், ஜோ பிடனுடன் விருந்தில் பங்கேற்பு.
          • நாடாளுமன்றம் அமைந்திருக்கும், 'கேபிடல் ஹில்' பகுதியில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை எம்.பி.,க்களின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.
            • அமெரிக்க சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக, அமெரிக்க இந்தியர்களின் வர்த்தக கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்க அதிகாரிகள், தொழிலதிபர்களை சந்திக்கிறார். பின், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, அமெரிக்க தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
              • மாலையில், வாஷிங்டனின், ஆண்ட்ரூ விமானப் படை தளத்திலிருந்து, ஏர் இந்தியா ஒன் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு பயணம்.

    English summary
    Prime Minister Narendra Modi left for the United States on Thursday, for his five-day trip to New York and Washington from the 26 to 30 September.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X