"அம்மா முடியலை.. பயமா இருக்கு.." உக்ரைன் போரில், மரணத்துக்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்
கீவ்: ‛‛அம்மா முடியவில்லை. நான் பயந்துள்ளேன். உக்ரைனில் உண்மையான போர் நடந்து வருகிறது. நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம்'' என ரஷ்ய ராணுவ வீரர் தனது மரணத்துக்கு முன்பு தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 6 நாளாக இன்றும் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்து குண்டுகளை வீசுகின்றன. இதனால் உக்ரைன் நகரங்களில் போர் மேகம் இன்னும் கலையவில்லை. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் அமைதியான வாழ்க்கையை இழந்து உக்ரைன் மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சொந்த நாட்டை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

ஐநா அவசர கூட்டம்
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமெரிக்காவில் அவசரமாக கூடியது. 40 ஆண்டுகளுக்கு பின் ஐநா பொதுசபையின் அவசர கூட்டம் கூடியது. இதில் ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸால் பங்கேற்றார். ரஷ்யாவின் போர் நடவடிக்கை, உக்ரைன் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறி பேசினார்.

ரஷ்ய வீரரின் குறுஞ்செய்தி
மேலும் அவர் உருக்கமான செய்தி ஒன்றை வாசித்து காண்பித்தார். ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவவீரர் ஒருவர் தனது தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியின் ‛ஸ்கீரின்ஷாட்' விபரங்களை வெளியிட்டார். போர் தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு, கொடூரம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. இதுபற்றி உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸால் கூறியதாவது:

பயமாக உள்ளது
ரஷ்யாவின் ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது தாய் குறுஞ்செய்தி செய்கிறார். அதில், ‛‛ஏன் நீண்டகாலமாக குறுஞ்செய்தி அனுப்பவில்லை. உனக்கான பார்சல் அனுப்பவா'' என கேட்கிறார். இதற்கு அந்த ரஷ்ய வீரர், ‛‛ நான் கிரிமியாவில் இல்லை. தற்போது நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்து வருகிறது. நான் பயந்துள்ளேன். நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம். உக்ரைன் மக்கள் எங்களை வரவேற்பார்கள் என்று ரஷ்யாவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களின் வாகனங்களின் முன்பு விழுந்து எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்கள் எங்களை பாசிஸ்டுகள் (பொதுவுடமை எதிர்ப்பாளர்கள்) என கூறுகின்றனர். அம்மா இது மிகவும் கொடுமையானதாக உள்ளது. நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்'' என குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதன்பின் அவர் இறந்தார்.

துயரத்தின் அளவு
இதன்மூலம் உக்ரைன் போர் கள துயரங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம். மேலும் துயரங்களின் அளவை துல்லியாக அறிய விரும்பினால் இந்த பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டின் உறுப்பினர்களுக்கு அடுத்ததாக 30 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதவிர 100க்கும் அதிகமான உக்ரைன் மக்களும், டஜன் கணக்கில் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது இன்னும் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒவ்வொரும் எடுக்க வேண்டும்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

முறியடிப்பு
முன்னதாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு குழு கூட்டத்தில் போர் தொடர்பான ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது. இதில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்த நிலையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications