For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிளிண்டன்... என்னை நானே மன்னித்தேன்: 10 ஆண்டுகளுக்கு பின் மவுனம் கலைக்கும் மோனிகா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடனான உறவு குறித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி. கிளிண்டனுக்கும் தனக்குமிடையே இருந்த உறவு குறித்து விளக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோனிகா.

அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார் மோனிகா.

தற்போது 40 வயதாகும் மோனிகா லெவின்ஸ்கி, வானிட்டி ஃபேர் மெகஸினுக்கு இது குறித்து வெளிப்படையான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த மேகஸினின் இணைய தளப் பதிப்பில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

வித்தியாசமான முடிவு...

வித்தியாசமான முடிவு...

என் கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய கதையின் முடிவினை வித்தியாசமாக முடித்து வைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திசை மாறிய வாழ்க்கை...

திசை மாறிய வாழ்க்கை...

கிளிண்டனுடன் எனக்கும் ஏற்பட்ட காதல் உறவு, மூத்தவர்களின் ஒப்புதல், பொது வாழ்க்கையின் அவமானம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு, அதனால் வாழ்வில் போக்கு திசை மாறி பலவித இன்னல்களை அளித்தது.

பலியாடு ஆனேன்...

பலியாடு ஆனேன்...

பில் கிளிண்டனின் அதிகாரம் மிகுந்த வாழ்க்கையினை பாதுகாப்பதற்காக நான் ஒரு பலியாடு ஆக்கப்பட்டேன்.

ஆழ்ந்த வருத்தம்...

ஆழ்ந்த வருத்தம்...

எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்... எனக்கும் அதிபர் கிளிண்டனுக்கும் இடையில் நடந்தவற்றுக்காக! மீண்டும் நான் சொல்கிறேன்.. நான், எனக்கு நானே... மன்னிப்பு. எது நடந்ததோ அதற்காக!

அவமானம்...

அவமானம்...

கடந்த 2010ல் ரட்கெர்ஸ் பல்கலை மாணவி ஒருவர், ஒரு ஆடவனை முத்தம் கொடுத்தது வீடியோ பதிவாக இணையத்தில் வந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்தச் செயல் என்னை இத்தகைய அவமானத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க தூண்டுகோலாக அமைந்தது.

முதல் நபர்...

முதல் நபர்...

இணையதளத்தில் உலக அளவில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திப் பரப்பும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல் நபராக நான் இருந்தேன்.

பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக...

பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக...

தற்போதைய நிலையில், இணைய வெளியில் இது போன்ற அவமானச் செய்திகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக, பொது வெளியில் பேசுவதற்கான மேடைகளில் தான் பங்கேற்று வருகிறேன்' என இவ்வாறு மோனிகா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி காக்கும் கிளிண்டன் தரப்பு...

அமைதி காக்கும் கிளிண்டன் தரப்பு...

இந்தக் கட்டுரை தொடர்பாக, கிளிண்டனின் செய்தித் தொடர்பாளரோ, நியூயார்க்கில் உள்ள கிளிண்டன் பவுண்டேஷனோ உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒப்புதல்...

ஒப்புதல்...

ஆனால், முதலில் இதில் தனக்குத் தொடர்பில்லை எனக் கூறிய கிளிண்டன் பிறகு ஒப்புக் கொண்டார்.

நீலநிற ஆடை...

நீலநிற ஆடை...

அதே ஆண்டு, கிளிண்டனுக்கும் தனக்கும் தொடர்பிருந்ததற்கு ஆதாரமாக நீல நிற ஆடை ஒன்றை விசாரணையில் சமர்ப்பித்தார் மோனிகா. தற்போது இந்தக் கட்டுரையில் தனது நீல நிற உடையைப் புதைப்பதற்கான காலம் வந்து விட்டதாக மோனிகா தெரிவித்துள்ளார்.

சபை அவமதிப்பு தீர்மானம்...

சபை அவமதிப்பு தீர்மானம்...

மோனிகா லெவின்ஸ்கி, கிளிண்டன் குறித்த இந்தப் பாலியல் விவகாரத்தால் வெள்ளை மாளிகையின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 99ல் செனட் அவையினால் கிளிண்டன் மீது சபை அவமதிப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லண்டன்வாசியானார்...

லண்டன்வாசியானார்...

இப்பிரச்சினைக்குப் பிறகு, 2000ம் ஆண்டில் முதலில் கைப்பை விற்கும் தொழிலைத் தொடங்கிய மோனிகா, ஜெனி கிரைக்கின் செய்தி தொடர்பாளராகவும் பணிபுரிந்தார். 2005ம் ஆண்டில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார் மோனிகா.

English summary
After a decade of silence over the affair with Bill Clinton that led to his eventual impeachment in 1998, Monica Lewinsky has finally decided to address the dramatic turn of events in a tell-all magazine column for Vanity Fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X