For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ்டர், மிஸ், மிஸஸ் போல இனி, திருநங்கைகளுக்கு... ‘எம்.எக்ஸ்’!

Google Oneindia Tamil News

லண்டன்: மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்பதைப் போல திருநங்கைகளைக் குறிக்கும் வகையில் இனி அனைத்து ஆவணங்களிலும் ‘எம்.எக்ஸ்' என எழுத இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக எம்.எக்ஸ் என்பதை டிக்ஸ்னரியிலும் ஆக்ஸ்போர்டு சேர்க்க உள்ளது.

ஆங்கிலத்தில் ஆண்களுக்கான அடைமொழியாக மிஸ்டர், பெண்களுக்கான அடைமொழியாக மிஸ், மிஸஸ் ஆகியன புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த இருபாலினத்தையும் சாராதவர்களையும் அடைமொழியாக எவ்வாறு குறிப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

ஆம், இனி அவர்களை எம்.எக்ஸ் என்ற அடைமொழியில் குறிப்பிடலாம்.

விரைவில் அனைத்து ஆவணங்களிலும்...

விரைவில் அனைத்து ஆவணங்களிலும்...

இதன் படி, ராயல் மெயில், ஹை ஸ்டீரீட் பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் தங்களது ஆவணங்களில் திருநங்கைகளை எம்.எக்ஸ் எனக் குறிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. அப்படியே, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஆவணங்களிலும் இந்த முறை பின்பற்றப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அகராதியிலும்...

அகராதியிலும்...

இந்த எம்எக்ஸ் (Mx) என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட உள்ளது. இது திருநங்கைகள் மற்றும் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினத்தையும் சாராதவர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும். ஆக்ஸ்போர்டு அகராதியின் அடுத்த பிரதியில் இது இணைக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக...

கடந்த 2 ஆண்டுகளாக...

ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அரசு அலுவல் சார்ந்த கோப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை இந்த அடைமொழியுடன் குறிப்பிடுவது வழக்கத்தில் இருக்கிறது. இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழில், "பிரிட்டனின் அரசுத்துறைகள், கவுன்சில்கள், வங்கிகள், சில பல்கலைக்கழகங்களிலும் எம்எக்ஸ் குறியீடு பயன்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

இதுவே முதல்முறை...

இதுவே முதல்முறை...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜோனாதன் டெண்ட் கூறும்போது, "அண்மைக்காலங்களில் அனைவருக்கும் ஏற்புடைய அடைமொழி குறியீடு அகராதியில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப ஆங்கில மொழி வளர்ச்சி காண்பதையே இது உணர்த்துகிறது" என்றார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எக்ஸ் பயன்பாடு கடந்த ஆண்டு முதல் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A new gender neutral title 'Mx' is to join the honorifics 'Mr, Mrs, Miss and Ms' on driving licences and other official documents, the first change to officially recognised titles in decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X