For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

லெபனான்

By Siva
Google Oneindia Tamil News

லெபனான்: ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மானில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மானில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 3.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Multiple quake hits Iran

இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. அதன் பிறகு 5.0, 4.5 என இரண்டு முறை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக நேற்று காலையும் கெர்மான் மாகாணத்தில் உள்ள ஹெஜ்தாக் மற்றும் ராவார் கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை நில அதிர்வு ஏற்பட்டது.

நேற்றைய நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதம் அடைந்தன, 18 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக திங்கட்கிழமையும் ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

English summary
Earth Quake of magnitude 6.0 struck Iran's southeastern province of Kerman on wednesday. Quake struck the same province on tuesday injuring 18 persons and damaging 20 houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X