For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது இடத்தில் ஹிலாரியை இப்படி அசிங்கப்படுத்தலாமா? மெட்ராஸ் பட பாணியில் ஆஸி.யில் ஒரு சுவர் அரசியல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மெல்பர்ன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனை மிகவும் ஆபாசமான வகையில், சித்தரித்து சுவர் சித்திரம் ஒன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வரையப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mural of swimsuit-clad Hillary Clinton mural causes controversy

நீச்சல் ஆடையில் அந்தரங்க உறுப்புகள் அதிகமாக வெளியே தெரியும்படி இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் போயுள்ளது. அவர்களின் கோபப்பார்வைக்கு சுவர் உரிமையாளரும், இதை வரைந்த தெருவோர ஓவியர் லஸ்சக்சும் உள்ளாகியுள்ளனர்.

கிராஃபிடி தடை சட்டம் 2007ன்கீழ், கிட்டத்தட்ட நிர்வாணமாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் தவறாகும். "கலைக்கு சென்சார் செய்யும் விஷயத்துக்கு நான் ஆதரவு தெரிவிப்பவன் கிடையாது. ஆனால், ஹிலாரி என்று இல்லை, எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், இப்படி வரைந்திருக்க கூடாது" என்று கூறுகிறார், கவுன்சில் உறுப்பினர் சாரா கார்டர்.

இந்த ஓவியத்தை அழித்துவிட உள்ளூர் அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஆனால், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தும்வரை அந்த ஆதாரத்தை அழிக்கவும் முடியாது என்ற தர்மசங்கடத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

ஆனால், ஓவியர் லஸ்சக்ஸ் இதுபற்றி கவலைப்படுவதாக இல்லை. மெல்பர்ன் கவுன்சிலின் முடிவு மோசமானது என அவர் கூறுகிறார். மக்கள் மீது கவுன்சில் அடக்குமுறையை ஏவுவதாக தனது ஓவியம் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார் அவர்.

எனக்கு ஹிலாரி ஒன்றும் எதிரி கிடையாது, டொனால்ட் ட்ரம்பையும் இதே போல என்னால் வரைய முடியும் என்று கூறும் லஸ்சக்ஸ், நான் வேண்டுமானால் ஹிலாரி ஓவியத்தை அழிக்காமல், அதையே கொஞ்சம் மாற்றி, பர்தா அணிவித்து ஒரு அழகான முஸ்லிம் பெண் என சித்தரித்துவிடவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.

ஓவியருக்கு ஆதரவாக ஒரு குரூப்பும், எதிராக பெரும்பாலான குரூப்பும் கச்சை கட்டி சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்., மொத்தத்தில், மெட்ராஸ் படத்தில் வரும் சுவர் ஓவியத்தைவிட மோசமாக, இந்த சுவர் ஓவியத்தை வைத்து பாலிடிக்ஸ் செய்கிறார்கள் ஆஸ்திரேலியாவில்.

English summary
Mural depicting Hillary Clinton in a revealing stars-and-stripes swimsuit has caused a commotion in the Australia suburb of Footscray near Melbourne.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X