கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.. இந்து கோவிலில் தங்கிய முஸ்லிம் மக்கள்.. பாகிஸ்தானில் நெகிழ்ச்சி!
இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் கனமழையால் கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்குள்ள முஸ்லிம் மக்கள் பலரும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அருகில் உள்ள இந்து கோவிலில் தங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது.
இதனால் பாகிஸ்தான் நாட்டில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின.

பாகிஸ்தானில் கனமழை
குறிப்பாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாறாக மழைக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

3 கோடி பேர் பாதிப்பு
இதேபோல் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பரளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால், உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் வெள்ளத்தினால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கு அதிகமானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் முஸ்லிம் சமூக மக்கள் இந்து கோவிலில் தங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமமே தண்ணீரில் மூழ்கியது
பாகிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் முஸ்லிம் மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அருகே செல்லும் நாரி, போலன் மற்றும் லெஹ்ரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக இந்த கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவித்தனர். 3 ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த கிராமம் முழுவதும் தண்னீரில் மூழ்கியது.

தங்க இடமின்றி தவிப்பு
இதனால் அங்கு வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். ஊரில் உள்ள அனைத்து இடங்களும் தண்ணீரில் மூழ்கியதாலும், சுற்றிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் அந்த கிராம மக்கள் தங்க இடமின்றி தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த ஊரின் அருகே உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பாபா மதோதாஸ் என்ற இந்து கோவில் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் இருந்தது. காங்கிரீட் கட்டிடமான அந்த கோவில் உயரமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்து கோவிலில் முஸ்லிம் மக்கள்
இதனால் அந்த கோவில் மட்டும் வெள்ளத்தில் மூழ்காமல் இருந்துள்ளது. அந்த கோவிலில் இருப்பவர்கள், கிராமத்தில் தங்க இடமின்றி தவித்த மக்களை தங்குவதற்காக கோவிலை திறந்து வைத்து அவர்களை அழைத்தனர். அதன்பேரில் முஸ்லிம் மக்களும் அந்த கோவிலில் தற்போது தங்கியுள்ளனர் என்று டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுற்றுக்கும் மேற்பட்ட அறைகள்
இந்தக் கோவிலில் நுற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாக அங்குள்ள இந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் பலோசிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம் என்றும் அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் தங்குவதற்காக கோவிலை திறந்து விட்ட இந்துக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications