For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து ஆற்றில் மிதந்துவந்த 60 லட்ச ரூபாய்..உரிமையாளர் யார் என போலீசார் விசாரணை

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நதி ஒன்றில் மிதந்து வந்த ரூ. 60,52,980 பணத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் உள்ள நதி அருகே தனது நாயோடு சென்று கொண்டிருந்த போது, நதியின் பணம் மிதந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நதியில் மிதந்து வந்த பணத்தைக் கைப்பற்றினர். சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணியதில் அவற்றின் மதிப்பு மொத்தம் 60 ஆயிரம் பவுண்டுகள் எனத் தெரிய வந்தது. அதாவது இந்திய மதிப்பில் 60 லட்சத்து 52 ஆயிரத்து 980 ரூபாய் ஆகும்.

நீரில் நனைந்ததால் பண நோட்டுகள் சேதமடைந்த போதிலும், மீதமுள்ள பணமே அதிக மதிப்பு உள்ளதாக இருப்பதாகவும், அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வங்கி பணத்தை சட்டப்பூர்வ உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்பால்டிங் சி.ஐ.டி. பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் வரை, இப்பணம் காவல் துறையினர் வாம் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பணத்தை ஆற்றில் விட்டவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் காவல் துறையிடம் தெரியப் படுத்தவும் எனக் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

English summary
Police are appealing for information after banknotes worth tens of thousands of pounds were mysteriously found floating down a river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X