உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்காங்களா? திங்கள்கிழமை தெரிஞ்சிடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதன் பல நூற்றாண்டு காலமாய் தேடிக் கொண்டிருப்பது வேற்றுக் கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கான ஆதாரப்பூர்வமான பதிலை.

பூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு. இதுகுறித்து பல ஆயிரம் பேர் ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பறக்கும் தட்டுகள், படங்கள்

பறக்கும் தட்டுகள், படங்கள்

நான் பார்த்தேன்... என்னிடம் ஆதாரம் உள்ளது என பல ஆயிரம் பேர் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வேற்று கிரகவாசிகள் குறித்து ஏராளமான பிரமாண்டப் படங்கள் வெளியாகி வசூலைக் குவித்து வருகின்றன.

ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நாசா ஆய்வு

நாசா ஆய்வு

இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

திங்கள்கிழமை 3 மணிக்கு

திங்கள்கிழமை 3 மணிக்கு

இதற்கான விடை அநேகமாக வரும் திங்கள்கிழமை தெரிந்துவிடும். இதுகுறித்த ஆய்வு முடிவுகளை வரும் திங்களன்று வெளியிடப் போவதாக நாசா அறிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) இதனை நாசா அறிவிக்கிறது.

பெரும் எதிர்ப்பார்ப்பு

பெரும் எதிர்ப்பார்ப்பு

நாசாவின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி, வேற்றுக்கிரகவாசி ஆர்வலர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை, யூகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nasa has announced that they would reveal the evidences for existing aliens on Monday
Please Wait while comments are loading...