For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன சந்திராயன்-1 விண்கலம்.. கண்டுபிடித்துக் கொடுத்தது நாசா!

இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு செயற்கைக் கோளான சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: காணாமல் போனதாக கருதப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் நிலவை சுற்றி வருவதை நாச கண்டறிந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திராயன் - 1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை அடைந்தது.

NASA has found India’s lost Chandrayaan-1; it is orbiting the moon

நிலவைப் பற்றிய பல புதிய தகவல்களையும் கண்டறிந்து, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. 2 ஆண்டுகள் வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1 செயற்கைக்கோளுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதுபற்றி பல முயற்சிகளை மேற்கொண்ட இஸ்ரோ, இறுதியாக காணாமல் போனதாக அறிவித்தது. தொடர்ந்து தேடும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டிருந்த போதிலும் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை என்றும் அது சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், சந்திராயன்1 ஒரு விண்வெளி குப்பையை போல நிலவைச் சுற்றிவந்து கொண்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

2018ம் ஆண்டில் சந்திராயன் 2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The National Aeronautics and Space Administration has found India's first Lunar probe, the Chandrayaan-1, which is now orbiting the moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X