For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்களும் ஆகலாம் நீல் ஆம்ஸ்டிராங்... செவ்வாய் பயணத்திற்கு "ஆளெடுக்க" ஆரம்பித்தது நாசா

Google Oneindia Tamil News

நாசா: வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வதற்கு விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

செவ்வாய் கிரகம் குறித்து நமக்குத் தெரிந்தது விரல் அளவுதான்.. ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கோ நிச்சயம் கடல் அளவு தெரிந்திருக்கும். ஆனால் இதுவரை செவ்வாய் கிரகம் குறித்து அது அதிகம் சொல்லாமல் உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் கூட மறுபக்கம் செவ்வாய் கிரக ஆய்வுகளை தொடர்ந்து அது முடுக்கி விட்டு வருறது.

அந்த வகையில், தற்போது செவ்வாய் பயணத்திற்கான விண்வெளி வீரர்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளதாம்.

விண்வெளி வீரர்கள் தேர்வு...

விண்வெளி வீரர்கள் தேர்வு...

புதிய விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை செவ்வாய் பயணத்திற்குத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளது நாசா. எதிர்கால செவ்வாய் பயணத்திற்கான விண்வெளி வீர்கள் தேர்வு இது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சாதனை படைப்பார்கள்...

சாதனை படைப்பார்கள்...

இந்த புதிய விண்வெளி வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழு வருங்கால பயணங்களுக்கு முன்னோடியாக இருப்பார்கள். செவ்வாய் கிரக பயணத்தில் புதிய சாதனை படைப்பார்கள். மனிதனின் காலடியை செவ்வாய் கிரகத்தில் பதிப்பார்கள் என நாசா ஒறுங்கிணைப்பாளர் சார்லஸ் போல்டன் கூறியுள்ளார்.

செவ்வாயில் தண்ணீர்...

செவ்வாயில் தண்ணீர்...

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில்தான் நாசா அறிவித்தது. இதைத் தொடர்ந்துதான் தற்போது செவ்வாய் பயணத்திற்கான நடவடிககைகளை அது முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.

தகுதி...

தகுதி...

நாசாவின் செவ்வாய் கிரக விண்வெளி பயணத்தில் தேர்வாக விரும்புவோர் பொறியியல், பயாலஜி அல்லது இயற்பியல், கணிதம் ஆகியவற்றில் அடிப்படை டிகிரியை முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு தொழில்முறை அனுபவம் அல்லது 1000 மணி நேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

6 அடி இருக்கணும்...

6 அடி இருக்கணும்...

ஸ்பேஸ் பிசிக்கல் சோதனையில் பாஸ் ஆக வேண்டும். அதாவது ஆண், பெண் இரு பாலினருமே அதிகபட்சம் 6 அடி 4 அங்குலம் அளவில்தான் உயரம் இருக்க வேண்டும். அதற்கு மேல் போகக் கூடாது.

செவ்வாய் பயணம்...

செவ்வாய் பயணம்...

இந்த தேர்வில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படும் வீரர்களும், வீராங்கனைகளும் அமெரிக்க விண்கலத்தில் அமெரிக்காவிலிருந்து செவவ்வாய் பணத்தை மேற்கொள்வார்கள் என்று போல்டன் கூறியுள்ளார்.

மீண்டும்...

மீண்டும்...

கடந்த 2011ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியிருந்தது நாசா. தற்போது அதை மீண்டும் செயல்படுத்த அது முடிவு செய்துள்ளது.

தேர்வாவோர் விபரம்...

தேர்வாவோர் விபரம்...

இதில் தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் 2017ம் ஆண்டு வெளியிடப்படும். அவர்கள் ஓரியான் விண்கலம் அல்லது வேறு கமர்ஷியல் விண்கலம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

கடைசித் தேதி...

கடைசித் தேதி...

இதில் இணைய விரும்புவோர் www.usajobs.gov. என்ற இணையதளத்திற்குப் போய் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் டிசம்பர் 14ம் தேதியாகும்.

பிறகென்ன விண்ணப்பிங்க..நீங்களும் ஆகலாம் நீல் ஆம்ஸ்டிராங்

English summary
The space agency is recruiting new astronauts “in preparation for the agency's journey to Mars,” it announced today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X