For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூ ஹாரிசான்ஸ் எடுத்த புளூட்டோவின் தெள்ளத் தெளிவான படம்...!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ்.

அரிய தகவல்கள்...

அரிய தகவல்கள்...

அப்புகைப்படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அனுப்பி வருகிறது நியூ ஹாரிசான்ஸ். அவற்றின் மூலம் புளூட்டோ மற்றும் அதன் சந்திரன்கள் குறித்துப் பல அரிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்று வருகின்றன.

நாசா...

நாசா...

அந்த அரிய புகைப்படங்களை நாசா மக்கள் பார்வைக்கும் வெளியிட்டு வருகிறது. அதன் மூலம் மக்களும் புளூட்டோ குறித்த தகவல்களைப் பெற்று வருகின்றனர்.

இதய வடிவம்...

இதய வடிவம்...

சில மாதங்களுக்கு முன் புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், நீலவானம், உறை நிலையில் தண்ணீர் மற்றும் அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சரிய தகவல்கள் நியூ ஹாரிசான்ஸ் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

தெளிவான புகைப்படங்கள்...

தெளிவான புகைப்படங்கள்...

இந்நிலையில் தற்போது முதல்முறையாக நியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சிக்கு உதவும்....

ஆராய்ச்சிக்கு உதவும்....

ஒரு பிக்சலுக்கு 250-250 அடி வரை கொண்ட இந்த புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The American space agency NASA published unprecedented super-high-resolution photos of the solar system's remote outer icy planet on Saturday, saying they gave earthlings an "unbelievable" view of its surface.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X