For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளியில் அதிக தூரம் கடந்து “ஆப்பர்சூனிட்டி” சாதனை – நாசா மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் ஆப்பர்சூனிட்டி அதிக தூரம் பயணம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய ஆப்பர்சூனிட்டி விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பபட்டது.

40 கிலோ மீட்டர் பயணம்:

40 கிலோ மீட்டர் பயணம்:

தற்போது ஆப்பர்சூனிட்டி, செவ்வாய் கிரகத்தில் 40 கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது இது செவ்வாய் கிரத்தில் என்டெவர் எரிமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மிகப் பெரும் சாதனை:

மிகப் பெரும் சாதனை:

இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சோவியத் ரஷியா சந்திரனுக்கு லுனோக்காட்-2 என்ற ஊர்தியை விண்கலம் மூலம் அனுப்பியது. அது கடந்த 1973 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அங்கு தரை இறங்கியது.

39 கிலோ மீட்டர் பயணம்:

39 கிலோ மீட்டர் பயணம்:

அங்கு 5 மாதத்துக்கும் குறைவாக 39 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதுவே மிகப்பெரும் சாதனையாக இதுவரை கருதப்பட்டது.

முறியடிக்கப்பட்ட சாதனை:

முறியடிக்கப்பட்ட சாதனை:

தற்போது அதன் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டதாக நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். மேலும், ரோவர் இவ்வளவு தூரம் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி:

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி:

1 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இச்சாதனையால் பூரித்துள்ளனர்.

English summary
The US space agency's Opportunity rover has now clocked more miles on Mars than any man-made vehicle to reach another celestial body, NASA said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X