For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானத்தில் வலம் வரும் டெஸ்லா காரை கண்காணிக்கும் நாசா.. காரணம் இருக்கு மக்களே!

வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா காரை தற்போது நாசா கண்காணித்துக் கொண்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விண்வெளியில் ஹாயாக சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர் கார்-வீடியோ

    நியூயார்க்: உனக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் டெஸ்லா கார் போல இருக்க வேண்டும் என்று கூறுங்கள். வானத்தில் அந்த கார் ஏவப்பட்டதில் இருந்து ஜாலியாக யாருக்கும் கட்டுப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

    இந்த கார் உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

    தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் நாசா அதை கண்காணித்துக் கொண்டும் உள்ளது.

    டெஸ்லா

    டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் ஆகும் இது. இந்த அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் வைத்து இருந்த கார். இது ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்தது.

    கண்காணிக்கும்

    தற்போது இந்தக் காரை நாசா கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான தனி பணியாளர்களையும் நியமித்து உள்ளது. இதற்கான தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் சொல்லியும் உள்ளது. இரண்டு நிறுவனமும் தற்போது நெருக்கமாக இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.

    என்ன காரணம்

    நாசா இதைக் கண்காணிக்க முக்கிய காரணம் இருக்கிறது. நாசாவை பொறுத்த வரை வானத்தில் இருக்கும் எல்லாப் பொருளும் எதோ ஒரு வகையில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது. அந்த வகையில் இந்தக் காரையும் கண்காணிக்கும். மேலும் இதை விண்கல் என்று தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சிதறும்

    இதில் இருந்த பேட்டரி 1 நாள் வரும் என்றார்கள். ஆனால் 4 மணி நேரத்தில் தீர்ந்துவிட்டது. அதேபோல் இந்த காரும் இந்த வருட இறுதிக்குள் சுக்குநூறாக உடையும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் இருக்கும் மாறுபட்ட கதிர்வீச்சு காரணமாக இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Space X successfully launched Falcon Heavy rocket. It is known as the worlds's largest and most power full rocket. It has created by Space X Company which is a private space research company run by Elon Musk. Nasa watches Space X's Tesla car in space.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X