For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத்தை கண்காணிக்க போகும் புதிய தொலைநோக்கி... நாசாவின் வேற லெவல் விண்வெளி திட்டம்!

உலகத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது. இந்த திட்டம் விண்வெளி உலகில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது.

இந்த தொலைநோக்கி மூலம் உலகத்தை புதிய தோற்றத்தில் பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த தொலைநோக்கி கேமரா போலவும் செயல்படும்.

இதனால் நாள் முழுக்க உலகத்தை கவனிக்க முடியும். சில முக்கிய கண்காணிப்பு பணிகளுக்கு இந்த தொலைநோக்கியை பயன்படுத்தலாம்.

தொலைநோக்கி

தொலைநோக்கி

நாசா அனுப்பும் இந்த தொலைநோக்கிக்கு ''வைட் பீல்ட் இன்ஃப்ராரெட் சர்வே டெலிஸ்கோப்'' பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது டார்க் எனர்ஜி குறித்து ஆராய உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை உலகில் இருக்கும் அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் இந்த தொலைநோக்கி முடிவிற்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

செயல்பாடு எப்படி

செயல்பாடு எப்படி

பொதுவாக விண்வெளியில் இருக்கும் 'ஹப்பிள்' ரக தொலைநோக்கிகளே இதிலும் பயன்படுத்தப்படும். ஆனாலும் இதில் மிகவும் பெரிய அளவில் அந்த தொலைநோக்கி அனுப்பப்படும். ஒரு சிறிய தொலைநோக்கி அனுப்பும் 10 புகைப்படத்திற்கு சமமாக இந்த பெரிய தொலைநோக்கி ஒரு புகைப்படம் அனுப்பும். அதில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இடத்தை இதில் பார்க்க முடியும்.

பயன் என்ன

பயன் என்ன

இதன் மூலம் உலகத்தின் மொத்த புகைப்படத்தையும் எடுக்க முடியும். மேலும் நாம் பார்க்காத இடங்கள் குறித்தும் மிக எளிதாக புகைப்படம் எடுக்க முடியும். எத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் இது துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும் பூமியையும் தேவைப்படும் சமயங்களில் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

எப்போது நடக்கும்

எப்போது நடக்கும்

இந்த திட்டம் நாசா வரலாற்றில் மிகவும் பெரிய திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை நாசா விண்வெளி துறையில் செலவு செய்ததை விட இதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த திட்டம் நிறைவடைய எப்படியும் 2020 மே மாதம்ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Nasa is going to launch new telescope to see the full universe. The telescope named Wide Field Infrared Survey Telescope (WFIRST) will set to launch on mid of 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X