For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஆர்பிக்காக நேபாளத்தை வைத்து அனுதாபம் தேடும் இந்திய மீடியாக்கள்.. நேபாள மக்கள் குற்றச்சாட்டு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தின் உண்மையை நிலையை தவிர்த்து டிஆர்பிக்காக இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிடுவதாக அந்த நாட்டு மக்கள் கோபப்படுகின்றனர்.

நேபாளத்தில் 80 ஆண்டுகளுக்கு பிறகு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கி, 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Nepalese slam Indian media

இந்நிலையில், இந்திய மீடியாக்கள், நேபாளத்தில் சென்று குவிந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதிலும் சில ஆங்கில காட்சி ஊடகங்கள் பரபரப்புக்காக, பொய்யான செய்திகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் நேபாள மக்கள், இந்த செய்திகளால் மேலும் வருத்தமடைந்துள்ளனர். தங்கள் கோபத்தை டிவிட்டரில் அவர்கள் வெளிப்படுத்தினர். #GoHomeIndianMedia என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, இந்திய மீடியாக்கள் மீது வசைமாறி பொழிந்தனர்.

கொச்சையாக சொல்ல வேண்டுமானால், உன் வேலையை பார்த்துகிட்டு உன் ஊருக்கு போ...என்பதுதான் இந்த ஹேஷ்டேக் சொல்ல விளைவது.

நேற்று நாள் முழுக்க நேபாளத்தில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவிலான டாப் டிரெண்டிங்கில் இருந்தது.

English summary
The Indian media is facing flak for its coverage of the earthquake disaster in Nepal with complaints in the social media that it was treating the tragedy as a "public relations exercise" on behalf of the Indian government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X