For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்திற்குப் போக இனி உசிலம்பட்டியை சுற்றிக் கொண்டு போகத் தேவையில்லை.. !

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனால் வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது எளிதாகும், செலவும் குறையும், அடிக்கடி போய் வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது செவ்வாய் கிரக பயணம் என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் பூமிக்கும், தற்போது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பாதை நீண்ட தூரம் கொண்டதுமாக உள்ளது. பல ஆயிரம் கோடிகளை இதற்காக செலவிட வேண்டியுள்ளது. அதை விட முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் போய் இறங்குவது என்பதும் சற்று சிக்கலான விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய ஆய்வு ஒன்று இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பத்திரமாகவும், செலவு அதிகம் இல்லாத வகையிலும் செல்ல இது வழி செய்யும்.

பாலிஸ்டிக் கேப்சர்

பாலிஸ்டிக் கேப்சர்

பாலிஸ்டிக் கேப்சர் (ballistic capture) என்ற புதிய முறை மூலம்தான் இதை சாதிக்கவுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இந்தப் புதிய முறை மூலம் எதிர்காலத்தில், அதிக அளவிலான ரோபோட்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும். மனிதர்களை அனுப்ப முடியும். மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வதும் கூட சாத்தியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

தற்போது நாம் செவ்வாய் கிரகத்திற்குப் போவதற்கு சற்று கடினமான வழியைக் கடைப்பிடிக்கிறோம். அதாவது புதிதாக சைக்கிள் கற்றுக் கொள்வோர் என்ன செய்வார்கள்.. குறுக்காக காலை விட்டு பெடல் செய்து பெடல் செய்து சைக்கிளை ஓட்டிப் பழகுவார்கள். நாம் இப்போது செவ்வாய் கிரகத்திற்குப் போவது கூட இதே பாணியில்தான். ஆனால் இந்த புதிய பாலிஸ்டிக் கேப்சர் என்பது, சைக்கிளின் இரு பக்கமும் சக்கரம் வைத்து பயமே இல்லாமல் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டுவது போல.

எரிபொருள் தேவை குறையும்

எரிபொருள் தேவை குறையும்

இந்த பாலிஸ்டிக் கேப்சர் என்பது குறைந்த அளவிலான எரிபொருளை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க வழி செய்யும். ஒரு வட்டப் பாதையிலிருந்து இன்னொரு வட்டப் பாதைக்கு விண்கலங்கள் மாற, அந்த விண்கலத்தின் என்ஜினை இயக்க வேண்டியுள்ளது, அதற்கு எரிபொருளை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் பாலிஸ்டிக் கேப்சர் மூலம் அந்தத் தொல்லை இனி தேவையில்லை. மாறாக, சக்தியைப் பயன்படுத்தாமலேயே ஒரு வட்டப் பாதையிலிருந்து இன்னொரு வட்டப் பாதைக்கு நாம் எளிதாக மாறிக் கொள்ள முடியும்.

ராக்கெட்டை இயக்குவதைக் குறைக்கலாம்

ராக்கெட்டை இயக்குவதைக் குறைக்கலாம்

தற்போது நாம் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல Hohmann என்ற முறையைக் கடைப்பிடிக்கிறோம். அதாவது விண்கலத்தின் ராக்கெட்டை செயல்பட வைத்து எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு வட்டப் பாதையிலிருந்து அடுத்த வட்டப் பாதைக்கு மாறுகிறோம். மாறாக பாலிஸ்டிக் கேப்சர் மூலம் எரிபொருள் தேவையில்லாமல் அதைச் செய்ய முடியும்.

ஆனால் லேட்டாகும்

ஆனால் லேட்டாகும்

ஆனால் இதில் ஒரு பிரச்சினை மட்டுமே உள்ளது. அதாவது Hohmann முறை மூலம் உடனடியாக அடுத்த வட்டப் பாதைக்கு மாறி விட முடியும். மாறாக பாலிஸ்டிக் முறையில் மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்கும்.

பொருட் செலவு குறையும்

பொருட் செலவு குறையும்

இதுகுறித்து நாசாவின் பிளானட்டரி சயின்ஸ் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் கிரீன் கூறுகையில், இந்தப் புதிய முறையானது நமக்கு பொருட் செலவையும், நேரச் செலவையும் மிச்சப்படுத்தும் என்றார் அவர்.

English summary
A new route to Mars could make manned missions much cheaper, easier and more frequent, researchers say.Getting spacecraft to Mars is quite a hassle and transportation costs can soar into the hundreds of millions of dollars. Now new research lays out a smoother, safer way to achieve Martian orbit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X