கடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குளிரில் உறைந்துபோன நயாகரா நீர் வீழ்ச்சி- வீடியோ

  நியூயார்க்: கடும் குளிரால் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதை சுற்றுலாப்பயணிகள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.

  அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் நிறைந்துள்ளது.

  கொட்டும் பனியால் சாலைகள் மரங்கள் வீடுகள் என அனைத்தும் வெண்பட்டு போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. கடுமையான குளிரும் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் உறைந்துக் காணப்படுகிறது.

  நயாகரா வீழ்ச்சி

  நயாகரா வீழ்ச்சி

  அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

  மைனஸ் 34 டிகிரி

  மைனஸ் 34 டிகிரி

  கடந்த சில நாட்களாக, வட அமெரிக்கா, நியுயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் கடும் குளிர் நிலவிவருகிறது. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது.

  உறைந்த நயாகரா

  உறைந்த நயாகரா

  இந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரில் இருந்து தப்பவில்லை. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.

  முழுவதும் உறையவில்லை

  முழுவதும் உறையவில்லை

  நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர்கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பனிப்பிரதேசங்களை போல் வெள்ளை வெளேர் என உறைந்துபோயுள்ளது.

  அன்டார்டிகா போல்

  அன்டார்டிகா போல்

  முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. பனிக்கட்டிகளாலும் மூடுபனிகளாலும் சூழப்பட்டு அன்டார்டிகா பிரதேசம் போல காட்சியளிக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி.

  ஐஸ்கட்டியாய் மாறிய நீர்வீழ்ச்சி

  ஐஸ்கட்டியாய் மாறிய நீர்வீழ்ச்சி

  நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.

  கடுமையான குளிர்

  கடுமையான குளிர்

  தண்ணீர் கொட்டினாலும் சுற்றியுள்ள பனியால் நீர்வீழ்ச்சியே பனிக்கட்டியாய் மாறியதாக தெரிகிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Niagara falls covered with ice. Most of the areas of Niagara falls frozen. Tourist wondering by seeing frozen Niagara falls.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X