For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீல நிற ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வடகொரியா போகாதீங்க... குழந்தை சாமிக்கு பிடிக்காது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொரியா: இசை, இணையம், மது, மதத்தை தொடர்ந்து நீல நிற ஜீன்ஸ் அணிய வட கொரிய அரசு தடை விதித்துள்ளது.

உலகிலேயே வாழ்வதற்கு ஆபத்தான நாடு என்று வடகொரியா அழைக்கப்படுகிறது. தொலைக்காட்சி, மது, இசை ஆகியவற்றிர்க்கு தடை விதித்தது போதாது என்று தற்போது நீல நிற ஜீன்ஸுக்கும் வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

North Korea Banned Blue Jeans

வடகொரியாவில் வசிக்கும் மக்கள் மக்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் எதையுமே செய்ய முடியாது. கார் ஓட்டுவதற்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பியபடி முடி வெட்டிக்கொள்ளக்கூடாது. அரசு அங்கீகரித்துள்ள 28 வகைகளில் ஒன்றை தேர்வு செய்து அதே போலத்தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். தற்போது வட கொரியாவில் நீல நிற ஜீன்ஸூக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தனமாக குண்டு உடல்வாகு, கபடமற்ற சிரிப்பு என அக்மார்க் குழந்தையாகவே காட்சியளிக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

ஒரு சர்வாதிகாரி. தன்னுடைய நாட்டில், மதங்களை பரப்புவது, சர்வதேச அளவில் தொலைபேசியில் பேச, அரசு பற்றி பேசுவது, வெளிநாடு செல்வது, ஆபாசம் திரைப்படம் எடுப்பது, இணையம் ஆகிய அனைத்திற்கு தடைவிதித்துள்ளார். தற்போது ஜீன்ஸ் அணியவும் தடை விதித்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா? நீல நிறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடு என்று கூறுகிறார். எனவேதான் வடகொரிய அதிபர் கிம் நீல நிற ஜீன்ஸ்க்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை உருவத்தில் உள்ள அதிபர் உள்ளத்தில் என்ன ஒரு வில்லத்தனம் என்று புலம்புகின்றனர் வடகொரியவாசிகள்.

English summary
Now news comes that blue jeans have been banned. For now, jeans are being sold in two styles- the slim-fit Kara and loose-fit Oke, and are made in black rather than blue denim.Blue denim is a “symbol of American imperialism” to the North Korean leader, Kim Jong-un and thus he absolutely despises it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X