வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.. 908 கி.மீ. என்கிறார் கிம்.. ஆனால் 3 கணக்கு இடிக்குதே

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த முறை சாதாரண ஏவுகணை இல்லை. ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியதாக கூறப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவுடன் நேரிலேயே சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வான்சான் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. சுமார் 3 மணி நேர இடைவெளியில் இந்த சோதனைகள் நடந்துள்ளன.

தென்கொரிய ராணுவ கண்காணிப்பின்படி, முதல் ஏவுகணை சுமார் 450 கி.மீ. தூரமும், 2-வது ஏவுகணை 600 கி.மீ.க்கும் அதிகமான தூரமும் சென்றன. பிறகு அவை கடலில் விழுந்தன.. ஜப்பான் தரப்பிலும் இந்த ஏவுகணைகள் தங்களது கடல் எல்லைக்கு வெளியே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

North Korea Missile Test

முதல் வித்தியாசம்

இந்த முறை சோதனை செய்யப்பட்ட ஏவுகணை "ஹவாசாங்-11 மா" என்று சொல்லப்படுகிறது. ஆனால் சோதனை தொடர்பாக வெளியான படங்களில், அதன் பெயர் "ஹவாசாங்-11 மா-1" என்று உள்ளது. இதை ஒலியை விட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று வடகொரியா கூறுகிறது.

ஹைப்பர்சோனிக் என்றால் என்ன தெரியுமா? இதை சிம்பிளாக சொன்னால், ஒலியை விட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணை... இது பறந்து செல்லும்போது, திடீரென தனது பாதையை மாற்றிக்கொள்ளுமாம். அதனால், இது எங்கே போகிறது என்பதை எதிரிகளால் முன்கூட்டியே கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும்.

2வது வித்தியாசம்

அதேபோல வடகொரியா வெளியிட்ட படங்களில் இன்னொரு வித்தியாசமும் தெரிகிறது. ஏவுகணை முதலில் மேலே சென்று, பிறகு கீழே இறங்கி, மறுபடியும் மேலே செல்வது போல பாதை ஸ்கிரீனில் காட்டப்பட்டுள்ளது. அதாவது, மேலிருந்து நேராக விழுவது போல இல்லாமல், வித்தியாசமான பாதையில் செல்வது போல் வடகொரியா காட்டியுள்ளது. ஆனால் உண்மையில் அப்படி நடந்ததா என்பதையும் வெளிப்புறமாக உறுதி செய்ய முடியவில்லை.

3வது வித்தியாசம்

அதேபோல, வடகொரியா வெளியிட்ட தகவலின்படி, இந்த ஏவுகணை 908.2 கி.மீ. தூரம் சென்றுள்ளது. அது அதிகபட்சமாக 35.8 கி.மீ. உயரம் சென்றதாகவும், ஒரு நொடிக்கு 2,146 மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தென்கொரியா நடத்திய கணக்கில், ஏவுகணைகள் 450 கி.மீ. மற்றும் 600 கி.மீ. தூரம் மட்டுமே சென்றுள்ளன. 2 நாடுகளும் சொல்லும் தூரத்தில் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. அதனால் வடகொரியா வெளியிட்ட இந்த கணக்குகளையும் அப்படியே உறுதி செய்யப்பட்ட தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஒலியைவிட 5 மடங்கு வேகம்

இதுபோன்ற ஏவுகணையை வடகொரியா இப்போது முதல்முறையாக சோதிக்கவில்லை. ஏற்கனவே 2021-ம் ஆண்டிலேயே ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்ததாக அந்த நாடு சொல்லியிருந்தது. அந்த ஏவுகணை ஒலியை விட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் என்று அப்போது தெரிவித்தது. கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக கூறப்பட்டது.

அதன்பிறகு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக வடகொரியா கூறி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது ஹவாசாங்-11 மா-1 ஏவுகணையை சோதித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள ஏவுகணையை மேலும் மேம்படுத்தியிருப்பதாக வடகொரியா காட்டியுள்ளது.

அதற்குள் பயங்கர பில்டப்

எனினும், இந்த ஏவுகணையின் வேகம், பாதையை மாற்றும் திறன் உள்ளிட்டவை உண்மையில் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், இந்த புதிய ஏவுகணை குறித்து கிம் ஜாங் உன் சொல்லும்போது, "இது எதிரி நாடுகளுக்கு குணப்படுத்த முடியாத தீராத தலைவலியாக இருக்கும்" என்கிறார்.

கிம் கொடுத்த இந்த பயங்கரமான பில்டப்புக்கு ஏற்ற அளவுக்கு ஏவுகணையின் திறன் இருக்கிறதா என்பதுதான் உலக நாடுகளின் டவுட்டாக உள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+